காசிப்பானை பார்த்துள்ளீர்களா? இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா
நமது முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்து பொருட்களுமே ஏதோ ஒரு வகையில் உடல் நலத்துடன் தொடர்புடையது.
அந்த வகையில் காசி பானை என்பது நமது முன்னோர்களால் பெரிதும் உபயோகப்படுத்தப்பட்ட தண்ணீர் குடிக்கும் பானையாகும். இது முழுக்க முழுக்க செம்பினால் செய்யப்பட்ட பானையாகும்.
பெயருக்கான காரணம்
முன்பெல்லாம் அனைவரும் செம்பில் செய்த நாணயத்தைத்தான் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் வேறு உலோகங்களைக் கொண்டு நாணயங்களை செய்ய ஆரம்பித்தார்கள்.
காலப்போக்கில் காசு செய்யப்பட்ட செம்பில் இந்த பானையும் செய்யப்பட்டதால் இதற்கு காசி பானை என்ற பெயர் வந்தது.
image - Amazon.in
இது விசேடங்களில் சீர் வரிசையில் முக்கிய இடம் வகிக்கின்றது. காரணம், இது செம்பினால் செய்யப்பட்ட பானை என்பதால் இதிலிருந்து தண்ணீர் குடிக்கும்பொழுது உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
முன்பெல்லாம் அனைத்து விசேஷங்களிலும் காணக்கூடியதாக இருந்த இந்த பானைகளை தற்போது பெரிதாக காணமுடிவதில்லை.
சிலருக்கு காசிப் பானைகள் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இதனால் அதனை செய்யும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.
நன்மைகள்
- காசி பானையில் சேமித்து வைத்திருக்கும் நீரை அருந்துவதால், எலும்பு உறுதியாகும்.
- குழந்தைகள் மற்றும் பெண்களை பாதிக்கும் இரத்தசோகையை கட்டுக்குள் வைக்கும்.
- உடல் வலிமையடைகிறது.
- குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாறான செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடிக்கும்பொழுது தாய்க்கும் சேய்க்கும் மிகவும் நன்மை பயக்கும்.
- இரத்த விருத்திக்கு அடிப்படை தேவையாக காப்பர் எனப்படும் செம்பு காணப்படுகிறது.
- செம்பு கலந்த நீரை குடிக்கும்போது இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
- காசிப் பானையில் சேமித்து வைத்துள்ள நீரை பருகும்போது விந்தணு உற்பத்தி அதிகரிக்கிறது.