12 பானைகள் மீது நின்று 5 வயது சிறுவன் நிகழ்த்திய சாதனை: வைரலாகும் காட்சி
இந்திய மாநிலமான தமிழகத்தில் 5 வயது சிறுவன் ஒருவன் 12 பானைகள் மீது மாறி மாறி ஏறி சிலம்பம் செய்து நோபல் பரிசு வென்றுள்ளார்.
தமிழகத்தில் திருப்பத்தூரை சேர்ந்த ஜெனோ (5) என்ற சிறுவன் பாரத் இன்ஸ்டியூட் சிலம்பம் மற்றும் கராத்தே கூடத்தில் சிலம்பம் மற்றும் கராத்தே பயிற்சி பெற்று வருகிறார்.
சிலம்பம் கலை மீது ஆர்வம் கொண்ட சிறுவன் முறையாக பயிற்சி பெற்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளார். சென்னையில் இருந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் குழுவினர் திருப்பத்தூர் சென்று சிறுவன் ஜெனோவின் திறமையைப் பதிவு செய்தனர்.
12 பானைகள் மீது மாறி மாறி ஏறி நின்று 20 நிமிடம் விடாமல் சிலம்பம் சுற்றி சிறுவன் அசத்தியுள்ளார். இதனைப் பாராட்டி அவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.