இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லையாம்...
குடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானது, உணவு.
எனவே உணவுக்கும் குடலுக்கும் உள்ள தொடர்பானது, மிகவும் முக்கியமானது. அதுமட்டுமில்லாமல் குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியமானது.
அறிகுறிகள்
1. என்ன சாப்பிட்டாலும் வயிறு உப்பிசமாக இருக்கும். இதனால் தினமும் காலைக்கடன் கழிக்க முடியாமல் மலச்சிக்கல் ஏற்படலாம். அல்லது இரண்டு, மூன்று தடவை வயிற்றோட்டம் போகலாம்.
2. சில உணவுகள் ஒத்துப்போகாமல் இருக்கலாம். உதாரணத்துக்கு, முட்டை அலர்ஜியாக இருப்பது. சிலருக்கு பால் பிடிக்காமல் இருக்கும். இன்னும் சிலருக்கு காய்கறிகள் உண்பது அலர்ஜியாக இருக்கும்.
3. காரணமில்லாமல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல்.
4. வாய் துர்நாற்றம். நாக்கை நீட்டும்பொழுது, அதில் மெல்லிய ஒரு படலம் படர்ந்திருப்பதை போலவும் அந்த படலத்தின் நிறம் மாறியிருப்பதைப் போன்றவும் இருக்கும்.
5. இரத்தசோகை, எலும்புத் தேய்மானம், விட்டமின் குறைபாடு போன்றவை இருக்கும்.
6. அடிக்கடி சளி பிடித்தால், உடலில் எதிர்ப்புச் சச்தி குறைவாக இருக்கின்றதென அர்த்தம்.
7. தோல் வறட்சி, தடிப்புக்கள், முகப்பருக்கள்
8. மனநிலை சீராக இல்லாமல் இருப்பது.
9. உடல் மிகவும் சோர்வாக இருத்தல்.
10. உடலின் எதிர்ப்பு சக்தியே நமக்கு நோயை உண்டாக்கலாம்.
குடலின் ஆரோக்கியத்தை சரிசெய்ய என்ன செய்யலாம்?
சரிவிகித உணவு முறை மிகவும் முக்கியமானது.
சில புளித்த உணவுகள் குடலின் ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கும். உதாரணம் - தயிர், இட்லி
தண்ணீர் குடிக்க வேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்.
7 தொடக்கம் 8 மணிநேர தூக்கம்.
புகைப்பழக்கம், கோப்பி, மதுபானம் என்பதை குடல்களை பாதிக்கும்.
தேவையற்ற கிருமிகள் குடலை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.