லேடி சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டிய ஜோதிகா - சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஜோதிகா
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜோதிகா.
இவர் இந்தி சினிமாவிலிருந்து வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் பிரபலமான ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிக்பாஸ் சீசன் 7-ல் என்னோட சப்போர்ட் இவருக்கு தான்...ரக்ஷிதா போட்ட பதிவால் ஆடிப்போன பிக்பாஸ் ரசிகர்கள்
திருமணத்திற்கு பின்னர் நடிப்பிலிருந்து விலகியிருந்த ஜோதிகா குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்குள் ரீ- என்றி கொடுத்துள்ளார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், சமிபகாலமாக நடிகர்களின் சொத்து விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் நடிகை ஜோதிகாவிடம் இருக்கும் சொத்து விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
அதாவது, “ ஜோதிகா ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கிறாராம். இவருக்கும் வருடாந்தம் 20 முதல் 30 கோடி ரூபாய் வரை வருமானம் வருமாம்.
அத்துடன் சென்னையில் 2000 சதுர அடிக்கு பங்களா, மும்பையில் ரூ. 70 கோடிக்கு அப்பார்ட்மெண்ட், சொகுசு கார்கள் என மொத்தம் ரூ. 330 கோடி வரை சொத்து சேர்த்து வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்,“ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட அதிகமான சொத்துக்களை ஜோதிகா வைத்திருக்கிறார்” என கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இதன்படி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 183 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |