இன்னும் DNA பரிசோதனைக்கு வராதது ஏன்? ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட முக்கிய ஆதாரம்!
நான் ஜாய் கிரிஸில்டாவை தன்னிச்சையான திருமணம் செய்துக்கொண்டதாக ஒருபோதும் ஒத்துக்கொள்ளவில்லை என குறிப்பிட்டு DNA பரிசோதனைக்கு தயார் என்று அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் ஏன் இன்னும் பரிசோதனைக்கு வரவில்லை என ஜாய் கேள்வியெழுப்பியுளதுடன் முக்கிய ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், ஜாய் கிறிஸில்டாவை தான் திருமணம் செய்து கொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டுடதாக தகவல்கள் வெளியாகி அண்மையில் வைரலானது.
அதனை தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்தும் தன்னை மிரட்டி திருமணம் செய்துக்கொண்டதாகவும், DNA பரிசோதனைக்கு நான் தயார் எனவும் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கை இணையத்தில் மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பியது.

அதனால் குழந்தை பிரசவித்து ஒரு சில வாரங்கள் கூட கடக்காத நிலையில், மீண்டும் நியாயம் கேட்டு சமூக ஊடக பக்கத்தில் ஜாய் பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் DNA பரிசோதனைக்கு தயார் என்று அறிக்கைவிட்ட போதும், அதற்கு இதுவரையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளதுடன், ஜாய் 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது அது என் குழந்தை எனக்கும் பெறுப்பும் கடமையும் இருக்கின்றது என ஜாய்க்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |