உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பீட்ரூட் சாதம்! இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க
பொதுவாக பீட்ரூட் என்றாலே இனிக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த காய்கறியை அனைவருக்கும் பிடிக்கும். இது ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
பீட்ரூட் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது. குறிப்பாக பீட்ரூட்டில் லைகோபீன் மற்றும் ஸ்குவாலேன் உள்ளிட்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கலவைகள் உள்ளதால், இது சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அதில் காணப்படும் விசேட வேதியல் கலவைகள் ஆன்டி-ஏஜிங் விளைவுகளை கொண்டிருப்பதோடு, முக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
எனவே சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க விரும்பினால், தினசரி உணவில் பீட்ரூட்டை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் பீட்ரூட்டில் கணிசமான அளவு வைட்டமின் சி இருப்பதால், இது சருமத்தில் பிக்மென்டேஷனை குறைத்து நீண்ட காலம் வரை இளமையான தோற்றத்தை கொடுப்பதுடன் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் வலுப்படுத்தும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பீட்ரூட்டை கொண்டு மதிய உணவுக்கு அசத்தல் சுவையில் பீட்ரூட் சாதம் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரிசி - 500 கிராம்
பீட்ரூட் - ½ கப் துருவியது
வெங்காயம் - 1
இஞ்சி பேஸ்ட் - ½ தே.கரண்டி
பூண்டு பேஸ்ட் - ½ தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
சீரகம் - ½ தே.கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கரம் மசாலா - ½ தே.கரண்டி
இலவங்கப்பட்டை - சிறிய துண்டு
பிரியாணி இலை - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து இரண்டு முறை நன்றாக கழுவிட்டு, தண்ணீர் சேர்த்து 15 தொடக்கம் 20 நிமிடங்களுக்கு நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம், பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, உப்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து துருவி வைத்திருக்கும் பீட்ரூட்டையும் அதனுடன் சேர்த்து நன்றாக வேகவைத்து, அதனுடன் ஊறவைத்திருக்கும் அரிசியை சேர்த்து நன்றாக வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பீட்ரூட் சாதம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |