இந்த மாதங்களில் பிறந்தவர்கள் நண்பரா கிடைச்சா விட்டுடாதீங்க... உயிரையும் கொடுப்பார்களாம்!
ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகளில் தாக்கம் செலுத்துவது போல், அவர்களின் பிறப்பு மாதமும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியான ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் குடும்ப உறவுகளை விடவும் நண்பர்களை அதிகம் விரும்புபவர்களாகவும், நட்புக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராகவும் இருப்பார்ளாம்.

அப்படி நட்புக்காக உயிரையும் கொடுக்க துணியும் குணம் கொண்டவர்கள் பெரும்பாலும் எந்த மாதங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என்கதை இந்த பதிவின் வாயிலாக அறிந்துக்டிகொள்ளலாம்.
பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்கள் மீது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்துபவர்களாக இருப்பார்கள்.
அவர்ள் மற்றவர்களுடன் உணர்ச்சிரீதியாக எளிதில் இணையக்கூடியவர்கள். இது அவர்களை நட்பில் சிறந்தவர்களாக மாற்றுவதற்கு துணைப்புரிகின்றது.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தங்களின் நண்பர்களின் ஆசைகளுக்கு, கனவுகளுக்கு மதிப்பளிக்கும் குணத்தை இயல்பிலேயே கொண்டிருப்பதால், சிறந்த நண்பனுக்கு உதாரணமாக மாறுகின்றார்கள்.
ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் உறவுகளில் நிலைத்தன்மைக்கு பெயர் பெற்றவர்களாகவும், விசுவாச குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு துணைப்புரிந்த நண்பர்களை இறுதி மூச்சு வரையில் மறக்கவே மாட்டார்கள். நட்புக்காக உயிரையும் கொடுப்பது சிறப்பு என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.
நட்புக்காக சொந்த குடும்பத்தையே எதிர்த்து போராடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்களை நண்பனாக பெற்றவர்கள் பெரும் அதிஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.
ஜூன்

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் வலுவான உணர்ச்சிப் பிணைப்பை உருவாக்கிக்கொள்வதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் எந்த காரணமும் அல்லது எதிர்பார்ப்பும் இன்றி ஒருவர் மீது அன்பு செலுத்தும் குணத்தை இயல்பிலேயே கொண்டிருப்பார்கள்.
நண்பனின் விருப்பதை தன் விருப்பமாக நினைக்கும் குணம் கொண்ட இவர்கள், அதனை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள்.
அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் குடும்பத்தையும் வாழ்க்கை துணையையும் விடவும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தங்கள் நட்பில் நல்லிணக்கத்தையும், சமநிலையையும் பராமரிக்க எந்த உறவை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள்.
மோதல்களை வெறுக்கும் அவர்கள் இயற்கையாகவே அமைதியான சூழைலையும், சுதந்திரத்தை பறிக்காத நண்கரை அதிகம் விரும்புகின்றார்கள். அப்படிபட்டவர்களுக்கு உயிரையும் கொடுக்கும் சிறந்த நண்பனாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |