மரணத்தை குறித்து ஏற்கனவே எச்சரித்த ஜோதிடர்... சீறி பாய்ந்த மாரிமுத்துவின் வைரல் காணொளி
எதிர்நீச்சல் சீரியல் குணசேகரனை ஜோதிடர்கள் கடந்த மாதம் எச்சரித்துள்ள நிலையில், மாரிமுத்து உயிரிழந்துள்ளது ஜோதிடர் கூறியது பழித்துவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஜோசியர்களை விளாசிய மாரிமுத்து
எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி-க்கு குணசேகரன் தான் முக்கிய காரணம். அந்த அளவிற்கு நடிப்பிலும், பேச்சிலும், அதைவிட 'ஏய்.. இந்தாம்மா' என அவர் கூறும் வாரத்தை தான் ஹைலைட்.
இது பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனியும் போட்டு வருகின்றது. மாரிமுத்து நடிகர் ஆவதற்கு முன்பு துணை இயக்குனராக ராஜ்கிரண், மணிரத்னம், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் வேறொரு ரிவியில் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான தமிழா தமிழா-வில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டிருந்தார். ஜோதிடர்கள் மற்றும் அதனை எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் சென்று கொண்டிருந்தது.
எச்சரித்த ஜோதிடர்கள்
கெஸ்டாக வந்த மாரிமுத்து ஜோதிடர்களை கடுமையாக விளாசியுள்ளார். 'இந்தியா முன்னேறாமல் இருக்க நீங்க தான் காரணம். ஜோதிடத்தை பார்ப்பவரையும், கூறுபவரையும் மன்னிக்கவே முடியாது.
அதுமட்டுமில்லாமல் அவர் கேட்ட கேள்வி, அனைத்தும் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கேள்வியாகவே இருந்தது என்று கூறலாம். அவர் பேசியதற்கு ஆவேசப்பட்ட ஜோதிடர் ஒருவர், குணசேகரனை சரமாரியாக பேசியுள்ளார். இதற்கு தனது பாணியில் தோரணையாக மாரிமுத்தும் பதில் அளித்தார்.
பின்பு ஜோதிடர் ஒருவர், அவரின் ஜாதகம் கேட்க அது தன்னிடம் இல்லை என்றும் அதனை கிழித்து விட்டதாக மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, ஜோதிடர் ஒருவர், உங்களுக்கு இடுப்பிற்கு மேல் பிரச்னை இருக்கிறதா என கேட்டார்.அதற்கு பதிலளித்த மாரிமுத்து தனக்கு இடுப்பிற்கு மேலே இதயம் தான் துடிக்கிறது என பதிலளித்தார். தற்போது, அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்க இந்த காணொளி வைரலாகிறது.
தரமான பதில்கள்....
— பாக்டீரியா (@Bacteria_Offl) July 23, 2023
குறிப்பா ரஜினிய வச்சி பேசினது Validஹான point....
உழைப்பில்லனா இங்க ஒரு மண்ணுமில்ல...
நாத்திகம் மக்களை தெளிவுபடுத்த அவசியமானது...
அத சரியா பேசும் போது மக்கள சிந்திக்க வைக்கும்..
That last Punch ❤❤❤❤??? pic.twitter.com/21IwXKYBq6