உயிரற்ற நிலையில் சடலமாக கொண்டு வரப்படும் மாரிமுத்து: கண்கலங்க வைக்கும் காணொளி
சீரியலில் கம்பீரமாக இருந்த நடிகர் மாரிமுத்து மருத்துவமனை Stretcherல் இருக்கும் காட்சி முதன்முதலாக வெளியாகியுள்ளது.
நடிகர் மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.
தற்போது மாரிமுத்து இன்று காலை படப்பிடிப்பில் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது இவர் உயிரற்ற நிலையில், Stretcherல் படுத்திருக்கும் முதல் காணொளி வெளியாகி ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
— Johnson PRO (@johnsoncinepro) September 8, 2023