வெறும் 1 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜியோ நிறுவனம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ரூ.1 என்ற விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், ரூ. 1 க்கு பயனாளர்களுக்கு 30 நாட்கள் வரை 100 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது.
மேலும், இந்த வவுச்சரை பயன்படுத்தி 10 முறை ரீசார்ஜ் செய்தால் ரூ.10 செலவாகும். இதன் அடிப்படையில் 30 நாட்களுக்கு தினசரி 100 எம்பி என்ற அடிப்படையில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். கட்டண உயர்வுக்கு பிறகு ஜியோ ரூ.15-க்கு 1ஜிபி 4ஜி வேக டேட்டாவை வழங்குகிறது.
இந்த நிலையில் ரூ.1-க்கு 100 எம்பி டேட்டா என்றால் ரூ.10-க்கு 1ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த 100 எம்பி டேட்டா 4ஜி வேகத்தில் கிடைத்த பிறகு இதன் வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும்.
இதனால், ஜியோ நிறுவனம் ரூ.1 க்கு ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது. ரூ.1 ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது நாட்டில் உள்ள எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் வழங்கிடாத மலிவான ப்ரீபெய்ட் சலுகையாகும்.
அதிகமாக டேட்டா பயன்படுத்தாத குறைந்த வருமானம் கொண்டவர்கள் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இந்த திட்டத்தில் ஒரே நேரத்தில் பயனர்கள் எத்தனை முறை ரீசாரஜ் செய்யலாம் என்பதை நிறுவனம் தெளிவுப்படுத்தவில்லை. இது முந்தைய புதிய சலுகையாக தெரிகிறது.