ஜெயம் ரவி வெளியிட்ட பதிவு... நீதிமன்ற உத்தரவை மீறுகின்றாரா?
நடிகர் ரவி மோகன் நீதிமன்றம் வெளியிட்டுள்ள வார்த்தையும் மீறி அறிக்கையை வெளியிட்டுள்ளது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரவி மோகன்
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அண்மையில் விவாகரத்து செய்ய முடிவெடுத்த நிலையில், இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ரவி மோகன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகன் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக கூறிவந்த நிலையில், ஆர்த்தி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
பின்பு இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்ட நிலையில், மனைவி ஆர்த்தி நீதிமன்றத்தில் தனக்கான ஜீவனாம்சத்தைக் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
மேலும் நீதிமன்றத்தில் இருவரும் அறிக்கை எதுவும் வெளியிடக்கூடாது என்று கூறியிருந்த நிலையில், தற்போது ரவி மோகன் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் கூறியது என்ன?
ரவி மோகனின் வழக்கறிஞர் கார்த்திகை பாலன் தான் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் ரவியின் திருமண தகராறு தொடர்பான உள்ளடக்கத்தைப் பற்றி விவாதிப்பதையோ அல்லது பகிர்வதையோ தவிர்க்குமாறு அனைத்து தனிநபர்களுக்கும் ஊடகங்களுக்கும் ஒரு பொது மற்றும் சட்ட எச்சரிக்கையாக செயல்படுகிறது. எந்தவொரு மீறலும் சட்டரீதியான விளைவுகளை ஏற்படுத்தும்.
ரவி மோகன், ஆர்த்தி மற்றும் சுஜாதா விஜயகுமாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். சமூக ஊடகங்களில் அவரைப் பற்றி தவறான மற்றும் அவதூறான பதிவுகள் வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் படி, சமூக ஊடகங்களில் இனி ரவி மோகன் குறித்த விவாதம் நடத்த கூடாது என்றும், வாதிக்கும் முதல் பிரதிவாதிக்கும்/பிரதிவாதிக்கும் இடையிலான திருமண தகராறு தொடர்பான எந்தவொரு தகவலையும் இடுகையிடுவதோ, ஹோஸ்ட் செய்வதோ அல்லது விவாதிப்பதோ அச்சு மற்றும் ஆன்லைன் ஊடகங்கள் இரண்டும் தடைசெய்யப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து தனிநபர்கள், ஊடக நிறுவனங்கள் (தொலைக்காட்சி, அச்சு, டிஜிட்டல்), வலைப்பதிவுகள், யூடியூப் சேனல்கள், மீம் பக்கங்கள் போன்றவை 24 மணி நேரத்திற்குள் சர்ச்சை தொடர்பான எந்தவொரு தகவலையும் நீக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
மீறினால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்காக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அவதானித் நெட்டிசன்கள், இவர் ஏன் இன்னும் இப்படி அறிக்கை போட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |