பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஆல்யா மானசா... வைரலாகும் காணொளி!
பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா, அவரின் பிறந்தநாளை துபாயில் சொகுசு கப்பல் போன்ற காரில் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆல்யா மானசா
ராஜா ராணி சீரியல் மூலம் சின்ன திரையில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ஆல்யா மானசா. இவர் அதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
அதனை தொடர்ந்து தங்களது தொழிலில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருகின்றார். சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடி தான் டாப்பில் இருக்கின்றார்கள்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றார்கள். முதல் தொடரே ஆல்யாவிற்கு வெற்றிகரமாக அமைய அடுத்தடுத்து ராஜா ராணி 2, இனியா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.
அண்மையில் தனது கணவருடன் இணைந்து புதிய வீடு கட்டியவர் தற்போது கேரளாவில் ஒரு போட் ஹவுஸையும் வாங்கியுள்ளார், அதன் விலை ரூ. 2 கோடி என்ற தகவல் அண்மையில் இணையத்தில் வைரலாகியதுடன் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களும் குவிந்தது.
இந்த ஆரவாரம் தணியும் முன்னரே தற்போது புதிய காரை வாங்கி மாஸ் காணொளியை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார்.
இறுதியாக சன் தொலைக்காட்சியில் இனியா தொடர் நடித்தவர் அது முடிவடைந்த பின்னர் இன்னும் எந்த சீரியலும் கமிட்டாகவில்லை.
இந்நிலையில் இன்று ஆல்யா மானசா பிறந்தநாள், அவரின் பிறந்தநாளை துபாயில் சொகுசு காரில் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |