பெயரை மாற்றிய விஜய் மகன் சஞ்சய் - சிக்மா படம் ரிலீஸ்... போஸ்டரில் டுவிஸ்ட்
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சஞ்சய் தன்னுடைய தந்தை பெயரை நீக்கி உள்ளதாக தெரிகிறது.

ஜேசன் சஞ்சய்
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
மக்கள் மத்தியில் இந்த படம் ஏப்ரல் மாதம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தில் தன்னுடைய இன்ஷியலை மாற்றியிருப்பதாக தகவல் வெளியானது.
மேலும் புதிய படத்திற்கான டைட்டில் கார்ட் மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என தகவல் வந்துள்ளது.

தந்தையின் பெயருக்கு பதிலாக அவர் "Jason Sanjay S" என்ற முறையில் அனைத்திலும் கையெழுத்திட்டு போட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் போஸ்டர்கள் "Jason Sanjay'S" ‘சிக்மா’ என்ற பெயரிலேயே இருக்கிறது.
இந்த நிலையில் ஜூலை 31ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ரிலீஸ் போஸ்டரில் ஜேசன் சஞ்சயின் பெயரில் எந்த இன்ஷியலும் இடம்பெறவில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |