நேற்று உயிர் திறந்த நடிகர்... அனாதையாக கிடக்கும் உடல்! உதவி செய்யும் பிரேமலதா
நடிகரும், சினிமா விமர்சகருமான சத்யேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். ஆனால் தற்போது அவரின் உடலை யாரும் எடுக்காமல் அனாதையாக பிணவறையில் உள்ளது.

சத்யேந்திரா
சத்யேந்திரா ஒரு நடிகர் மற்றும் சினிமா விமர்சகரும் கூட. இவர் பலராலும் திரை விமர்சகராக தான் அறியப்படுகிறார். இவர் திரையில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு விமர்சனம் கூறுவார்.
இதை அவருடைய ஒரு வழக்கமான தொழிலாக செய்து வந்துள்ளார். இவர் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அது மக்களால் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் எந்த ஒரு புதிய படம் வந்தாலும் சத்யேந்திராவிடம் ரிவியூ கேட்பதை யூடியூபர்கள் பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். சமீபத்தில் இவர் கருப்பு படத்திற்கும் தனது கருத்துக்களை வைத்திருந்தார்.
இதன் பின்னர் சில நாட்கள் சுகயீனமாக இருந்த அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

அனாதையாக கிடக்கும் உடல்
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட சத்யேந்திராவின் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
பெங்களூருவிலுள்ள இவருடைய உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாததால் இவருடைய உடல் ராயப்பேட்டை மருத்துவமனையிலுள்ள பிணவறையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து கருத்துக்களை வினோதினி வைத்தியநாதன் பதிவிட்டிருந்தார். தனது எக்ஸ் பக்கத்தில், "நடிகரும், சினிமா விமர்சகருமான சத்யேந்திரா மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாரும் தற்போது அருகில் இல்லை என்றும், அவருக்காக யாரும் உதவ முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு கேப்டன் வள்ளல் விஜயகாந்த் அறக்கட்டளை சார்பில் அவருடைய மருத்துவமனைச் செலவுகள், இறுதி சடங்கு செலவுகள் உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தேமுதிக தயாராக உள்ளது.
மனிதநேய அடிப்படையில், இது போன்ற ஒரு சூழலில் அவருக்கு உதவ தேமுதிக தயாராக இருக்கிறது" என்று பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |