முதன்முறையாக மகனின் முகத்தைக் காட்டிய கத்ரீனா கைஃப் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
Katrina Kaif revealed her son: பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் தங்களது ஆண் குழந்தையின் முகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு, மகனின் புகைப்படத்தை கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், ஏராளமான லைக்குகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
நடிகை கத்ரீனா கைஃப்
கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ‘பூம்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் கத்ரீனா கைஃப்.
ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தனது நடிப்புத் திறமை, நடனத் திறமை மற்றும் அழகான தோற்றம் ஆகியவற்றின் மூலம் படிப்படியாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

தொடர்ந்து ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர்கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
குறிப்பாக, ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ‘அக்னிபத்’ திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், ஆமீர்கானுடன் இணைந்து நடித்த ‘தூம் 3’ திரைப்படத்திலும் அவரது நடனமும் தோற்றமும் பெரிதும் பேசப்பட்டன.

இவ்வாறு நடிப்பிலும் நடனத்திலும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் கத்ரீனா கைஃப். அவர் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படத்திற்குப் பின்னர் அவரது நடிப்பில் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரைத் திரையில் காண முடியாமல் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
குடும்ப வாழ்க்கையும் மகன் விஹானும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த கத்ரீனா கைஃப், கடந்த 2021ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தங்களது குடும்ப வாழ்க்கையை மிகவும் தனிப்பட்ட முறையில் பேணி வந்தனர்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு இறுதியில் இந்தத் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்களது மகனுக்கு விஹான் கௌஷல் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்தது முதல் அவரது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்திருந்தாலும், முகத்தைத் தெளிவாகக் காட்டாமல் மறைத்தப்படியே புகைப்படங்களை பகிர்ந்தார்.

மகனின் முகத்தை வெளிப்படுத்திய கத்ரீனா
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கத்ரீனா கைஃப் தனது மகன் விஹானின் முகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்குக் காட்டும் வகையில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

scene movie review : டார்க் காமெடியில் தெறிக்கவிட்ட ஜித்து மாதவன்... சூர்யாவின் 'சீன்' எப்படி இருக்கு?
மேலும், அந்தப் புகைப்படத்துடன், "Our brightest Diwali yet. Wishing everyone love, light and happiness" எனக் குறிப்பிட்டு, இந்த ஆண்டின் தீபாவளி தங்களுக்கு மிகவும் பிரகாசமானதும் மகிழ்ச்சியானதுமான ஒன்றாக அமைந்துள்ளதாகவும், அனைவருக்கும் அன்பு, ஒளி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |