அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்த யாழ் மாணவன்.. குவியும் வாழ்த்துக்கள்
2021 புலமைப்பரிசி பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பிடித்த யாழ் மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய மாணவன் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்காக பொறியியலாளராக வந்து சேவையாற்றுவேன் என தெரிவித்துள்ளான்.
தமிழக மக்களுக்கு சேவை செய்வேன்
மேலும், தனது சாதனையை பற்றி தெரிவிக்கையில் நான் சூம் வகுப்பினூடாக எனது படிப்பினை மேற்கொண்டேன். எனது அம்மா ஆசிரியர், அப்பா வியாபாரம் செய்கிறார்.
தொடர்ந்து எனது அம்மா மற்றும் அப்பா ஊக்கமளித்ததன் காரணமாகவும் எனது பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் எனது ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த பெரு வெற்றியைப் பெற முடிந்தது.
எதிர்காலத்தில் நான் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.