உச்சந்தலை அரிக்கின்றதா... கவலையை விடுங்க!
இன்று பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும் பாரிய பிரச்சினை என்னவென்றால், தலைமுடி உதிர்வு, வறண்ட முடி என்பவைதான். அவற்றை தீர்த்துக்கொள்ள என்னவெல்லாமோ செய்கின்றனர்.
ஆனால், அவற்றை தீர்ப்பதற்கான எளிமையான வழிமுறைகள் காணப்படுகின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
விளக்கெண்ணெய் - நெல்லிக்காய் பொடி
நெல்லிக்காய் தூளை தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் போல் செய்துகொள்ளவும். அதில் தேவையான அளவு விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளவும். பின்னர் செய்து வைத்துள்ள நெல்லிக்காய் பேஸ்ட்டை உச்சந் தலையிலும் முடியிலும் தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பின்னர் சாதாரண ஷெம்பூ கொண்டு கழுவவும். இது முடியை பளபளப்பாகவும் பட்டுப் போல் வைத்திருக்கவும் உதவும்.
நல்லெண்ணெய்
நல்லெண்ணெயை சூடாக்கி, தலையில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். ஒரு துண்டை சூடான நீரில் நனைத்து தலையில் சுற்றி கட்டி 10 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். பின்னர் துண்டை எடுத்துவிட்டு மறுநாள் காலையில் ஷெம்பூ கொண்டு அலசினால் தலையிலிருக்கும் அரிப்பு நீங்கிவிடும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றை எடுத்து உச்சந்தலையில் தேய்த்து 5 நிமிடங்களின் பின்னர் ஷெம்பூ போட்டு கழுவ வேண்டும். அதுமட்டுமில்லாமல் தயிருடன் எலுமிச்சை சாற்றை தேய்த்து மென்மையாக தடவவும். அவ்வாறு செய்தால் தலைமுடியில் அரிப்பு மற்றும் வறட்சி குறைவடையும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை விரல்களில் தடவி மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடங்களின் பின்னர் ஷெம்பூ கொண்டு தலையை அலச வேண்டும். இது தலைக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஒருமணி நேரம் கழித்து ஷெம்பூ கொண்டு தலையை அலச வேண்டும்.