குளித்த உடனேயே துண்டை போர்த்திக்கொள்ளாதீர்கள்! இந்த பிரச்சினையை ஏற்படுத்துமாம்
பொதுவாக நம்மில் பலர் குளித்த உடனேயே துண்டை உடலில் போர்த்திக்கொண்டு வருவார்கள்.
ஆனால் உடலை துடைத்த ஈரமான துண்டுகளை உடலில் போர்த்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று கருதுகின்றார்கள்.
எனவே நீங்கள் கவனமாக டவலை பயன்படுத்த வேண்டும். எப்படி துண்டை பயன்படுத்துவது? ஒரே துண்டை தொடர்ந்து பயன்படுத்தினால் அதனால் என்ன பிரச்சினைகள் எழும் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
ஏன் போர்த்தக்கூடாது?
டவலில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம். அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல
தினசரி உபயோகிக்கும் டவல்களில், கிருமிகள் சேர ஆரம்பித்து, இதனால் அதை பயன்படுத்தும் போது பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது, வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, தொற்று போன்ற நோய்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றது.
டவலால் உடலைத் துடைக்கும்போது ஈரமாகி, அதன் பிறகு ஈரப்பதம் நீண்ட நேரம் இருப்பதால், அதில் பாக்டீரியாக்கள் உருவாகி, நாம் அதை பயன்படுத்தும் போது இந்த பாக்டீரியாக்கள் உடலில் நுழைந்து பல்வேறு வகையான நோய்கள் வரக் காரணமாக இருகின்றன.
நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
துண்டுகள் மூலம் பரவும் மற்ற நோய்களைத் தவிர்க்க, வாரத்திற்கு ஒரு முறை உங்கள் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
இதைச் செய்வதன் மூலம் பாக்டீரியாக்கள் அழிந்து, உங்கள் சுகாதாரமும் கெடாது இது தவிர, உடலை டவலால் துடைத்த பிறகு, சூரிய ஒளியில் காயவைக்க வேண்டும். இதனால் பாக்டீரியா பரவாது மற்றும் ஈரப்பதமும் இருக்காது.