கதறும் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் தடுமாறும் தனம்.. ஆப்ரேஷன் விடயத்தை கண்டுபிடித்து விட்டாரா ஐசு?
கதறும் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் தடுமாறும் தனத்தின் நிலை ரசிகர்கள் மத்தியில் ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் 4 சகோதரர்கள் கொண்ட குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதனை எடுத்து காட்டுகின்றது.
அதாவது, மூர்த்தி அண்ணனுக்கும் தனம் அண்ணிக்கு கீழ் மற்றைய தம்பிகளும் அவர்களின் மனைவிகளும் மூத்தவர்களின் நிழலில் இருந்து வருகிறார்.
தற்போது புதிய வீடு கட்டி அந்த வீட்டிற்குள் குடும்பமாக குடிப்பெயர்ந்துள்ளார்கள்.
ஆப்ரேஷன் விடயத்தை கண்டுபிடித்த ஐசு
இந்த நிலையில், தனத்திற்கு மார்ப்பக புற்றுநோய் இருந்த காரணத்தினால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனால் தனத்தால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாது. முல்லை தான் பிள்ளைக்கு பால் கொடுத்து வருகிறார். தனம், மீனா, முல்லை மூவரும் அமர்ந்து கண்ணனின் வழக்கு விடயமாக பேசிக் கொண்டிக்கிறார்கள்.
அப்போது தனத்தின் குழந்தை அழுகிறது ஐசு குழந்தைக்கு பால் கொடுக்குமாறு தனத்திடம் கூறுகிறார்.
ஆனால் தனத்தால் பால் கொடுக்க முடியாத காரணத்தால் தடுமாறிக் கொண்டு முல்லையை பார்க்கிறார்.
இந்த சம்பவத்தில் ஐசு தனத்திற்கு ஆப்ரேஷன் செய்துள்ளார்கள் என்பதனை கண்டுபிடித்து விடுவார்கள் என்பது போல் தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |