புளியமரத்தில் பேய்கள் இருப்பது உண்மையா? ஏன் பறவைகள் கூட இதில் ஓய்வெடுப்பதில்லை...
புளிய மரத்தின் பூ, இலை, வேர், காய், பழம் என அனைத்துமே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
ஆனால் நமது முன்னோர்கள் புளிய மரத்தின் அருகில் அதிக நேரம் இருக்கக் கூடாது எனவும் அதன் கீழ் தூங்க கூடாது எனவும் சொல்லிவைத்துள்ளார்கள்.

இதற்கு பலபேர் கூறும் கருத்து புளிய மரத்தில் பேய் இருக்கிறது என்பதாகும். உண்மையிலேயே புளியமரத்தில் பேய் இருக்கிறதா? முன்னோர்கள் இப்படி கூறியமைக்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் காரணம்
புளிய மரம் ஏனைய மரங்களை விட அதிகம் குளிர்ச்சியானது, இதன் அருகில் அதிக நேரம் இருப்பதால் நம் உடல் அதிக குளிர்ச்சியாகி வாத நரம்புகள் பாதிக்கப்படும்.

இதனால் உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கு கை காலை அசைக்க முடியாத நிலை வரும், இதற்கு காரணம் புளிய மரத்தின் அதிக குளிர்ச்சி தன்மை தான்.
மற்ற மரங்களை போன்று புளிய மரத்தில் எந்த பறவையும் கூடு கட்டி வாழ்வதை அவதானிக்க முடியாது.இதற்கு காரணம் புளிய மரம் ஏனைய மரங்களோடு ஒப்பிடும் போது மற்ற மரங்களை விட அதிகமாக கார்பன் டை ஆக்சைடை (carbon dioxide) வெளிவிட கூடியது.

இதனால் பறவைகளோ மிருகங்களோ சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்க நேரிடும்.மேலும் அதன் கீழ் தூங்குவதனால் நம்மை சுற்றி அதிகமாக கார்பன் டை ஆக்சைடு இருக்கும், ஆனால் மனிதன் சுவாசத்திற்கு ஆக்சிசன் தேவை இதனால் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அதுவே இன்று வரை புளிய மரத்தில் பேய் இருப்பதாக சித்தரிக்கப்பட்ட எண்ணக்கருவின் பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை. முன்னோர்கள் சிறுவர்களை புளிய மரத்திற்கு அருகில் செல்லாமல் பாதுகாக்க புனையப்பட் கதையே அதில் பேய் இருக்கின்றது என்பது.
You May Like This Video
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        