இந்த திகதியில் பிறந்தவரா நீங்க? அப்போ வாழ்வில் பணத்திற்கு பஞ்சமே வராது
பொதுவாகவே ஜோதிடத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்புக்குப் பிறகு, கிரகங்களும் நட்சத்திரங்களும் அந்த நபரின் வாழ்க்கையை தீர்மாணிப்பதாக நம்பப்படுகின்றது.
உண்மையில் பிறந்த தேதியும் ஒரு நபரின் வாழ்க்கையில் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும், எண் கணிதத்தின் மூலம், ஒருவர் பிறந்த தேதியை வைத்தே அவரின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்.
அந்தவகையில் 6 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் ஆளுமை மற்றும் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறப்பியல்புகள்
பிறந்த தேதியை கூட்டினால் வரும் முடிவு எண் அந்த நபரின் தரநிலையை நிர்ணயம் செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, 15 ஆம் தேதி பிறந்த ஒருவருக்கு 1+5 = 6 என்ற எண் வரும்.
6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 6 என்ற விகிதத்தில்தான் இருப்பார்கள். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். அன்பு மற்றும் அமைதியின் அடையாளமாக சுக்கிரன் கருதப்படுகிறது.
இந்த எண்ணில் பிறந்தவர்கள் தோற்றத்தில் அழகாக இருப்பார்கள். மிகவும் பயனுள்ள விஷயங்களை மட்டுமே செய்வார்கள். இந்த தேதியில் பிறந்தவர்களின் முதுமை தாமதமாகதான் வெளிப்படும். நீண்ட காலமாக இளமையாக வாழ்வார்களாம்.
இந்த தேதியில் பிறந்தவர்கள் கலை, நகை, ஜவுளி வியாபாரத்தில் லாபம் மற்றும் ஆதாயம் பெறுவார்கள். இது தவிர, திரைப்படங்கள், நாடகங்கள், பயணம், தங்கம், வெள்ளி போன்றவற்றுடன் தொடர்புடைய வேலைகள், உணவகம், ஹோட்டல் வணிகம் ஆகியவை அவர்களுக்கு லாபகரமாக இருக்கும்.
6ஆம் எண் கொண்ட மக்களின் நிதி நிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அவர்கள் தங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவிடுவார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகள் மூலம் அதிகமாக பணம் சம்பாதிப்பார்கள்.
அவர்களுக்கு எல்லாவிதமான வசதிகளும் ஆடம்பரமான வாழ்க்கையும் கிடக்கும். ஆனால் இவர்களின் குடும்ப வாழ்க்கையை மதிப்பீடு செய்தால், பல்வேறு காரணங்களால் அவர்களது உடன்பிறந்தவர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ மோதல்கள் இருப்பதைக் காணலாம்.
இந்த எண்கள் கொண்டவர்கள். சுக்கிரனின் ஆசியை பெற்றவர்கள். அதனால் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள் இவர்களிடம் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |