நாய்கள் சாக்லேட் சாப்பிட்டால் ஆபத்தா? அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று சாக்லேட். சாக்லேட்டை விரும்பாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.அந்தளவிற்கு சாக்லேட்டின் சுவை அனைவரையும் அடிமையாக்கியுள்ளது.
இப்படி நாம் விரும்பி சாப்பிடும் இந்த சாக்லேட்டை வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் சாப்பிட்டால் என்னவாகும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
வீட்டில் வளர்க்கும் நாய் சாக்லேட் சாப்பிட்டதன் பின்னர் எந்த மாதிரியான உடல் மாற்றங்களை அனுபவிக்கின்றது என அவதானித்திருக்கின்றீர்களா?
நாய்கள் தவறுதலாக சிறிதளவு சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டால் கூட அது உயிர் போகும் அளவிற்கு வேதனைகளை அனுபவிக்கும் என்பதே உண்மை.இதற்கான காரணம் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் காரணம்
சாக்லேட்டுகளில் மெதைல்சாந்தைன் அல்கலாய்டு தியோப்ரோமைன் (Methylxanthine Alkaloid Theobromine) என்ற வேதிப்பொருள் உள்ளது. இந்த தியோப்ரோமைன் அளவு ஒவ்வொரு விதமான சாக்லேட்டுக்கும் மாறுபடும்.
உதாரணமாக டார்க் சாக்லேட்டில் 1கிராம் அளவிற்கு -20மிகி இருக்கும். மில்க் சாக்லேட்டில் 1கிராம் அளவிற்கு 2மிகி இருக்கும். ஒயிட் சாக்லேட்டில் மிகவும் குறைந்த அளவான 1கிராம் அளவிற்கு 0.1மிகி தான் இந்த வேதிப்பொருள் அளவு இருக்கும்.
இந்த தியோப்ரோமைன் வேதிப்பொருள் உள்ள சாக்லேட்டுகளை நாம் உண்ணும் போது, நமது தசைகளுக்கு ஒருவித ஓய்வைத் தரும். ஆனால் நாய்களுக்கு இந்த தியோப்ரோமைன் வேதிப்பொருள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாகும்.
நாய்கள் சாக்லேட்டை சாப்பிட்டால், அதன் இதயம், நரம்பு மண்டலம் மற்றும் சுவாசத்தைப் பாதிக்கும். மேலும் வாந்தி, ரத்தக் கசிவு, இதயம் செயலிழப்பு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, வலிப்பு போன்ற போன்ற அறிகுறிகள் தோன்றும்.
டார்க் சாக்லேட்டில் அதிகபட்ச தியோப்ரோமைன் உள்ளதால், 10கிலோ எடையுள்ள நாய்,100கிராம் அளவுள்ள டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், இறந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் இந்த விடயம் குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள்.JOIN NOW |