நீரிழிவு நோயாளிகள் எந்த பழங்களை சாப்பிடலாம்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள் தொடர்பிலும் தவிர்க்க வேண்டிய பழங்கள் குறித்தும் நம்மில் பலரிடம் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை இது தொடர்பான சரியான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
நோயாளிகள் எந்த ஒரு இனிப்புப் பழத்தையும் சாப்பிடும் முன் நிறைய யோசிக்க வேண்டும். ஆனால், இனிப்பாக இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காத பழங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
ஆப்பிள்
ஆப்பிள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பழமாகும். ஆப்பிள் இனிப்பாக இருந்தாலும், சர்க்கரை நோயாளிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆப்பிளின் கிளைசெமிக் இண்டெக்ஸ் சுமார் 40 ஆக இருப்பதால் அதை சாப்பிடுவதால் நமது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.
சப்போட்டா
சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு சப்போட்டா நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது ஆனால் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகள் அதிகம் பழுத்த சப்போட்டாவை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
தர்பூசணி
நீரிழிவு நோயாளிகளுக்கு தர்பூசணி நல்லதாக என்று கருதப்படுகிறது. தர்பூசணி இனிப்பாக இருந்தாலும், தர்பூசணி சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. ஏனெனில் தர்பூசணியின் கிளைசெமிக் குறியீட்டு அளவும் மிகக் குறைவு.
சர்க்கரை நோய் இருந்தாலும் தினமும் தர்பூசணி சாப்பிடலாம் எந்த பாதக விளைவையும் ஏற்படுத்தாது. மாம்பழம் இனிப்பாக இருந்தாலும் இரத்த சர்க்கரை அளவை பெரிதாக பாதிக்காது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தை சிறிய அளவில் சாப்பிட வேண்டும்.
மாம்பழம்
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டுமானால், தினமும் அரை மாம்பழம் சாப்பிடலாம். இந்த அளவு உடலின் சர்க்கரை சமநிலையில் பெரிதாக பாதிப்பை ஏற்ப்படுத்தாது.
திராட்சை
சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறிதளவு திராட்சையை உட்கொள்ள வேண்டும்.இந்த லேசான இனிப்பு பழம் உங்கள் இனிப்பு பசியை நீக்குவதோடு, சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது.
திராட்சையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவாக இருப்பதால், அது இனிப்பாக இருந்தாலும், திராட்சை சர்க்கரையை அதிகரிக்காது.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதற்கு இனிப்பாக இருந்தாலும் அதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகக் குறைவு, எனவே இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதால், தினமும் ஆரஞ்சு பழத்தை கவலையின்றி உட்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள்.JOIN NOW |