தமிழ் பெண்ணை மணந்த பும்ராவுக்கு ஐபிஎல் அணி கொடுத்த அதிர்ச்சி பதில்! பின்னாடி இப்படி ஒரு காரணமா?
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கும், சஞ்சனாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்ற நிலையில், ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இது தொடர்பான, புகைப்படங்களை பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் ஆகியோர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.
அதற்கு ஏகப்பட்ட வாழ்த்துகளும், லைக்குகளும் குவிந்தன. இந்நிலையில், ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சற்று வித்தியாசமாக இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அதில், பும்ராவின் ட்வீட்டை பகிர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வாழத்துக்களைத் தெரிவித்ததுடன், 'ஏப்ரல் - மே மாதங்களில் மாலத்தீவு நன்றாக இருக்கும்' என புதிய ஜோடிக்கு ஹனிமூன் ட்ரிப்பிற்கான ஐடியாவைக் கொடுத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமே, ஏப்ரல் 9 ஆம் தேதியன்று ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதால், பும்ரா ஹனிமூன் செல்லும் பட்சத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியில் பவுலிங்கில் பலம் வாய்ந்த அவர், ஐபிஎல் தொடரில் இடம்பெறாமல் போகலாம். அவர் இல்லாததால், எதிரணியினரான தங்களுக்கு நெருக்கடி சற்று குறையும். அதனைக் குறிப்பிட்டு சூசகமாக ராஜஸ்தான் அணி ஏப்ரல், மே மாதங்களில் ஹனிமூன் செல்ல அறிவுறுத்தியுள்ள இந்த நக்கலான ட்வீட்கள் ரசிகர்களிடையே நகைச்சுவை ஏற்படுத்தியுள்ளது.
Congratulations, guys! ?
— Rajasthan Royals (@rajasthanroyals) March 15, 2021
We hear Maldives is great in April - May ? https://t.co/K3cBgz6cBS