ராஜஸ்தானை விரட்டி முதலிடத்தை பிடித்த குஜராத் அணி - அபார வெற்றி!
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில், குஜராத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி வழக்கம் போல் மேத்தீவ் வெட் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதே போன்று சுப்மான் கில்லும் 13 ரன்களுக்கு வெளியேற, விஜய் சங்கர் 2 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
நன்றாக விளையாடிய வந்த தமிழக வீரரான சாய் சுதர்சனை நீக்கி விட்டு விஜய் சங்கருக்கு வாய்ப்பு கொடுத்தார் ஹர்திக் பாண்டியா.
அதற்கு கடும் விமர்சனம் எழ விஜய் சங்கரும் வழக்கம்போல் அவுட் ஆகி நடையை கட்டினார். 53 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அபினவ் மனோகரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர்.
பொளந்துகட்டிய ஹர்திக் பாண்டியா
அபினவ் மனோகர் 28 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். மறுமுனையில் ஹர்திக் பாண்டியா தனது வழக்கமான அதிரடியை வெளிக்காட்டினார்.
4 சிக்சர், 8 பவுண்டரிகளை விளாசிய ஹர்திக் பாண்டியா 52 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். இறுதியில் டேவிட் மில்லர் தனது பழைய ஃபார்மை மீண்டும் வெளிகாட்டினார். 14 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.
ரோப் கார் விபத்து சம்பவம்: வெளியான மோதிக்கொள்ளும் அதிர்ச்சி வீடியோ
ராஜஸ்தான் தோல்வி
இதனால், 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. இதன்பின்னர், ராஜஸ்தான் அணி 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
ஆரம்பத்திலேய ஜாஸ் பட்லர் காட்டு அடி அடிக்க அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அரைசதத்துடன் பட்லர் அவுட் ஆக மீண்டும் ரன் குறைய ஆரம்பித்தது. இறுதியில், ஷிம்ரன் ஹேட்மயர் தனி ஆளாக நின்று போராடினார்.
எனினும் ஹேட்மயர், ரியான் பராக், ஜேம்ஸ் நிஷம் ஆகியோர் முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து தோல்வியை தழுவியது.
இதன்மூலம், குஜராத் அணி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது . கொல்கத்தா அணி 2 வது இடத்திலும் ,ராஜஸ்தான் அணி 3 வது இடத்திலும் ,பஞ்சாப் அணி 4 வது இடத்திலும், உள்ளது .