ரோப் கார் விபத்து சம்பவம்: வெளியான மோதிக்கொள்ளும் அதிர்ச்சி வீடியோ
கடந்த நாளில், ரோப் கார் விபத்து சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலை மீது சென்று இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறைசார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் காரான இங்கு 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் நீளம் கொண்டது. கடந்த நாளில் 48-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.
ரோப் கார்கள் மலை உச்சியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் 44 மணி நேர மீட்புப் பணியில் இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 2 ஹெலிகாப்டா்களில் வந்த விமானப் படையினா், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், ரோப் காா்களில் சிக்கித் தவித்தவா்களுக்கு ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்) மூலமாக, உணவு, குடிநீா் அளிக்கப்பட்டது. இதனிடையில், விபத்து ஏற்பட்ட ரோப் காரில் பயணம் செய்தபோது அதிலிருந்த பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
Footage of Deoghar Ropeway Accident
— Purushottam Keshri (@k_puru30) April 12, 2022
10-04-2022 4:30pm#Jharkhand#Deoghar#DeogharRopewayAccident #DeogharAccident#PMModi#IAF pic.twitter.com/GvdoIfIh4Q