சூடு பிடிக்கப்போகும் ஐபிஎல் 2023- மும்பை அணி வீரர்களுக்கு பயிற்சி கொடுத்த பொல்லார்ட்
நடைபெற உள்ள ஐபிஎல் 2023 தொடருக்காக மும்பை அணி வீரர்களுக்கு பொல்லார்ட் பயிற்சி கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வரும் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
வீரர்களுக்கு பயிற்சி கொடுத்த பொல்லார்ட்
இந்த ஐபிஎல் போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பொல்லார்ட் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், மும்பை அணி வீரர்களுக்கு பேட்டிங் குறித்து சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
பொல்லார்ட் உடன் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி பயிற்சி குறித்து கேட்டறிந்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.