ஆடம்பர வாட்ச்க்கு ஆசைப்பட்டு கிரிக்கெட் வீரரிடம் கோடிகளை பறிக்கொடுத்த ரிஷப் பண்ட் - நடந்தது என்ன?
இந்திய அணியின் விக்கெட் கீப்பர், ஐபில் போட்டியின் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் ரூ.2.6 கோடியை ஏமாந்துவிட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த நாட்களுக்கு முன் மும்பை மற்றும் டெல்லி அணி போட்டியில், மும்பையிடம் தோல்வியை தழுவி டெல்லி அணி ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில், மன உளைச்சலில் இருந்த ரிஷப் பண்டிற்கு வாட்ச்க்காக 3 கோடிக்கு பக்கமாக பறிக்கொடுத்தள்ளதாக காவல் நிலையத்தில் அவரின் மேலாளர் புனித் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஹரியானவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மிருனாங்க் சிங் என்பவர் கடந்த ஜனவரி மாதம் ரிஷப் பண்டை சந்தித்து, ஆடம்பர கடிகாரங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்று கூறி மிருனாங்க் சிங் அறிமுகமாகி உள்ளார்.
இந்திய அணியில் சஞ்சு சாம்சனை புறக்கணிப்பது ஏன்?

இதனை நம்பி, ரிஷப் பண்டும் ஆடம்பர கடிகாரங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்று கூறி மிருனாங்க் சிங் அறிமுகமாகி உள்ளார். மேலும், தன்னிடம் உள்ள ரூ.36.25 லட்சம் மதிப்புக்கொண்ட ஃப்ராங்க் முல்லெர் வாட்ச் மற்றும் ரூ. 62.60 லட்சம் மதிப்புக்கொண்ட ரிச்சர்ட் மில்லே இரண்டையும் கொடுத்து விற்றுக்கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.
ஆனால், நீண்ட நாட்களாக பதில் வராததால், பண்ட் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து, மொத்தமாக ரூ.3 கோடியை திருப்பிக் கொடுக்குமாறு கோரியுள்ளார். ஆனால், மிருனாங்க் முழு பணத்தையும் தர முடியாது என ரூ1.63 கோடிக்கு காசோலை கொடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாத முக்கிய வீரர்கள் - பிசிசிஐ கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
அதிலும் பணம் இல்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க மும்பை போலீசார் விசாரணை நடத்தகையில், சினிமா இயக்குநர் ஒருவரும் மிருனாங்கிடம் பணத்தை பறிகொடுத்திருப்பதாகவும், ஏற்கனவே இவர், 6 லட்சம் மோசடியில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, தீவிர விசாரணையை காவல்துறையினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.