இந்திய அணியில் சஞ்சு சாம்சனை புறக்கணிப்பது ஏன்? ஜொலிக்காத வீரருக்கு வாய்ப்பளித்தால் கொந்தளிக்கும் ரசிகர்கள்
தென்னாப்பிரிக்கா தொடரில், ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய, நடராஜன், ஷிகர் தவான், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காத சம்பவம் இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
ஐபிஎல்லில் இந்த ஆண்டின் தொடரில் பல முன்னணி வீரர்கள் சொதப்பினாலும், சொதப்பி வந்த அனுபவம் வாய்ந்த் இந்திய வீரர்கள் மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என சிறப்பாக விளையாடி வந்தனர்.
முக்கிய வீரர்கள் புறக்கணிப்பு
அதிலும், முக்கிய வீரர்களான, சஞ்சு சாம்சன், நடராஜன், அஸ்வின், ஷிகர் தவான், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், போன்ற நட்சத்திர வீரர்கள் தங்களின் திறமையை காட்டியுள்ளனர்.
ஆனாலும் இந்திய அணியில், இவர்களை ஒரு பக்கம் புறக்கணித்து தான் உள்ளது. சொல்லப்போனால், முக்கிய வீரரான சஞ்சு சாம்சன் இடம்பெறாதது தான் பெரிய பிரச்சினையாகவே வெடித்துள்ளது.
பெரும் ஆபத்தில் சிக்கிய ஐபிஎல்... விழிபிதுங்கி நிற்கும் பிசிசிஐ.. சிஎஸ்கே மும்பை அணிதான் காரணமா?
சஞ்சு சாம்சனை ஒதுக்குவது ஏன்?
கேரளாவை சேர்ந்த 27 வயதான சஞ்சு சாம்சன். 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை மொத்தம் 13 டி20 போட்டியிலும், ஒரே ஒரு நாள் போட்டியிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடும் வீரர். திறமையான விக்கெட் கீப்பர், ஆட்டத்தை தனியாளாக மாற்றும் திறன் என பல திறமைகள் இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஜொலிக்காத வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பா?
ஐபிஎல் சீசனில் 14 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன், 374 ரன்களை அடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து சொதப்பிய வெங்கடேஷ் ஐயர் 12 போட்டியில், விளையாடி 182 ரன்களும், விக்கெட்டே எடுக்காத வெங்கடேஷ் ஐயருக்கு மட்டும் இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாத முக்கிய வீரர்கள் - பிசிசிஐ கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
ரோகித் வாய்ப்பு அளிக்க மறுக்கிறாரா?
ஏற்கனவே, கேப்டன் ரோகித் சர்மா தான், ஆஸ்திரேலிய மைதானங்களில் சஞ்சு சாம்சன் போல் ஷாட்கள் ஆடும் வீரர்கள் தேவை என்றும், அவருக்கு ஆதரவு தருவோம் என்று கூறினார்.
ஆனால், இலங்கைக்கு எதிராக 2 போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கிவிட்டு மற்ற போட்டிகளில் புறக்கணிப்பது ஏன்? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நோக்கி பிசிசிஐ மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு மத்தியில் திறமை வாய்ந்த வீரர்களை புறக்கணிப்பது தொடர்ந்து கொண்டு தான் வருகிறது...