நயன்தாரா மெஹந்தி டிசைனில் நடந்த சுவாரசியம்! ஆர்ட்டிஸ்ட் பகிர்ந்த உண்மை
நடிகை நயன்தாரா தனது திருமணத்திற்கு போட்டுக்கொண்ட மெஹந்தி ஃபங்ஷன் குறித்த ரகசியம் வெளியாகியுள்ளது.
நயன்தாரா விக்னேஷ் ஜோடி
கடந்த 7 வருடங்களாக காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் 9-ந் தேதி தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது, திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர ஓட்டலில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இவர்களது திருமண நிகழ்வில் ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவிற்கு இருவரும் மறுவீடு விருந்து என சென்று கொண்டிருக்கின்றனர்.
திருமணம் முடிந்ததில் இருந்து, சமூக வலைத்தளம் முழுவதும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் பேச்சுக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.
திருமணத்தின் போது மணமக்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் அணிந்திருந்த உடைகள், நகை போன்றவை பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
நயன்தாராவும் சிவப்பு நிற உடையில் தேவதை போல் ஜொலித்தார். விக்னேஷ் சிவன், பாரம்பரிய வேட்டி, சட்டையில் கலக்கினார்.
மெஹந்தி நிகழ்வில் நடந்த சுவாரசியம்
இந்நிலையில், திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற மெஹந்தி விழாவில் நயன்தாராவுக்கு போடப்பட்ட மெஹந்தி டிசைன் அதற்கு பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெஹந்தி டிசைனர் ஆர்ட்டிஸ்ட் சரினா என்பவருக்கு, நயன்தாராவிற்கு மெஹந்தி போட வேண்டும் என்று தெரிந்ததும், மகிழ்ச்சியில் என்ன செய்வது என்றே தெரியவில்லையாம்.
நயன்தாராவுக்கு போட்ட மெஹந்தி டிசைனின் பெயர் மண்டாலாவாம். அந்த டிசைனுக்கு நடுவில் WN என்று எழுதுமாறு கூறினார்களாம். இருவரின் பெயரின் முதல் எழுத்து என்பதால் அதனை எழுதுமாறு நயன்தாரா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் அம்மா, அக்கா, தங்கை உள்ளிட்ட உறவினர்களும் தன்னிடம் மெஹந்தி போட்டு கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.