திருமணமான நான்கு நாளில் விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்? அதிருப்தியில் நயன்தாரா
நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமமணம் செய்து கொண்டார்.
நயன்தாரா விக்கி
நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 9ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றள்ளத. பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன்தாரா பிரம்மாண்ட விருந்து மட்டுமின்றி விலை உயர்ந்த பரிசும் கொடுத்துள்ளார். திருமணம் முடிந்து திருப்பதி கோவிலுக்குச் சென்ற இந்த ஜோடிகள் சர்ச்சையில் சிக்கி பின்பு மன்னிப்பு பதிவு ஒன்றினை விக்கி வெளியிட்டார்.
இவர்களின் திருமணத்திற்கு பின்பு இவர்களைக் குறித்த தேடலை அதிகமாக நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம், திருமணம் முடிந்ததும் அவர் அணிந்து வந்த புடவை, நகை, திருமணத்திற்கான செலவு, கொடுத்த பரிசுகள் என தலைப்புக்களை தான் இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர்.
விக்னேஷ் போட்ட கண்டிஷன்
இருவரும் திருமணத்திற்கு பின்பு தங்களது வேலையில் கவனம் செலுத்துவார்கள் என்று நயன்தாரா கையில் பெரிய பெரிய படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் படங்களை கை வசம் வைத்துள்ளார்.
அதில் அவர் ஹிந்தியில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமாகும் ஜவான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த கையோடு பல கண்டிஷன்களை போட்டு வருகிறாராம்.
பொதுவாக பிரபலமாக இருக்கும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அதற்குப் பிறகு அவர்கள் ரொமான்ஸ், கிளாமர் போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள். இதற்கு நடிகை ஜோதிகாவை கூறலாம்.
நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா அதற்குப் பிறகு சோலோ ஹீரோயின் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த பாலிசியை தான் விக்னேஷ் சிவன், நயன்தாராவையும் பின்பற்ற சொல்கிறாராம். இனி ஹீரோக்களுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்குமாறு அவர் நயன்தாராவிடம் கூறியிருப்பதாகவும், நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.