நயன்தாரா, விக்கி மீது புகார்! அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஜோடிகள்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நயன்தாரா விக்கி ஜோடிகள்
நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 9ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றள்ளத. பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன்தாரா பிரம்மாண்ட விருந்து மட்டுமின்றி விலை உயர்ந்த பரிசும் கொடுத்துள்ளார். திருமணம் முடிந்து திருப்பதி கோவிலுக்குச் சென்ற இந்த ஜோடிகள் சர்ச்சையில் சிக்கி பின்பு மன்னிப்பு பதிவு ஒன்றினை விக்கி வெளியிட்டு பிரச்சினையை முடித்தார்.
யாருக்கும் அனுமதி கிடையாது
திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை மட்டும் அழைத்த இவர்கள், கடுமையான கடுப்பாடுகளையும் வைத்திருந்தனர். கடும் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில் கூட பொதுமக்களையும், பத்திரிக்கையாளர்களையும் அனுமதிக்க மறுத்தனர்.
குறித்த நட்சத்திர விடுதியின் பின்புறமுள்ள கடற்கரை பகுதிக்கு கூட பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நயன்தாரா கல்யாணம் என்றால் ரோட்டில் கூட யாரும் நடக்கக் கூடாதா என பலர் கோபமாக வாக்குவாதம் செய்த நிலையில், தற்போது புகார் வரை சென்றுள்ளது.
இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமூக ஆர்வலர் சரவணன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடற்கரை என்பது பொதுவான இடம். அந்த இடத்தில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது.
குறித்த இடத்திற்குள் பொதுமக்களை அனுமதிக்காதது மனித உரிமையை மீறிய செயல் என தெரிவித்த நிலையில், குறித்த மனுவை விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.