இன்ஸ்டாகிராமில் Live Location அனுப்ப முடியுமா? புதிய அம்சத்தை அறிமுகம்
இன்ஸ்டகிராமர் பயனர்கள் தங்கள் லைவ் லொகேஷனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதி ஒன்றினையும், ஸ்டிக்கர் பேக்குகள் உள்ளிட்ட புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம்
இன்றைய காலத்தில் வாட்ஸ் அப் போன்று இன்ஸ்டாகிராமும் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தி வரும் ஒரு சமூக வலைத்தளம் ஆகும்.
இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு புதுபுது அம்சங்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போதும் லைவ் லொகேஷன்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது ஒரு மணி நேரம் வரை இந்த லைவ் லொகேஷனை பகிரலாம். மேலும் நெரிசலான இடங்களில் நண்பர்களை ஒருங்கினைக்க அதிக நேரம் செலவழியாமல் உதவி செய்கின்றது.
இன்ஸ்டாகிராமின் லைவ் லொகேஷன் அம்சமானது, உங்கள் நிகழ்நேர இருப்பிடத்தை டிஎம்கள் (டிரைக்ட் மெசேஜ்) மூலம் தனிப்பட்ட முறையில் அல்லது குழுக்களில் பகிர உதவுகிறது. குறிப்பிட்ட நபர்கள் மட்டும் இதனை பார்க்க முடியும் என்பதையும் வேறு யாருக்கும் இதனை அனுப்ப முடியாது என்பதையும் பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
லைவ் லொகேஷன் அம்சம் பயன்பாட்டில் இருக்கும்போது, அது குழுவின் மேற்புறத்தில் குழு உறுப்பினர்களுக்கு சுட்டிக் காட்டப்படும். மேலும் நீங்கள் எந்த நேரத்திலும் உங்களது இருப்பிடத்தை பகிர்வதை நிறுத்தலாம்.
இந்த அம்சத்தை எப்பொழுதும் பொறுப்புடனும் மற்றும் உங்கள் நம்பகமான நபர்களுடன் மட்டுமே பகிரவும்.
இந்த லைவ் லொகேஷன் அம்சம் தற்போது குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் எந்தெந்த நாடுகள் என்கிற பட்டியல் ஏதும் இல்லை.
இதே போன்று இன்ஸ்டாகிராம் 17 புதிய ஸ்டிக்கர் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வார்த்தைகள் குறையும் போது நேரம் மிச்சம் ஆவதுடன், இந்த ஸ்டிக்கர்களை நேரடியாக பயன்படுத்தும் போது நாம் சொல்ல வேண்டிய விடயமும் விரைவில் நண்பர்களிடம் சேர்ந்து விடுகின்றது.
புதிய ஸ்டிக்கர்
இது தவிர, இன்ஸ்டாகிராம் இப்போது உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ புனைப்பெயர்களை வைக்கும் மற்றொரு புதிய அம்சத்தையும் டிஎம்-களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் புனைப்பெயர் அம்சம் உங்கள் டிஎம்-களில் மட்டுமே காணப்படும். மற்ற இடங்களில் பயனர்களின் பெயர்களை இது பாதிக்காது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |