மயூ தான் முக்கியம்..! இனியா ஆசையில் மண்ணை போடும் கோபி.. இது தான் கதையின் திருப்புமுனையா?
மயூ தான் முக்கியம் என இனியாவுடன் டூர் செல்லமாமல் ராதிகாவுடன் கோபி இருந்து விடுகிறார்.
பாக்கியலட்சுமி
சினிமாவை விட மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது சின்னத்திரையாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சிகளில் நாளுக்கு நாள் புதிய புதிய சீரியல்கள் உருவாக்கம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதில் பாக்கியா, கோபி, ராதிகா, செழியன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்கள்.
முடிவை மாற்றிய கோபி
இந்த நிலையில், இனியாவின் கல்லூரி படிப்பிற்காக கேரளாவிற்கு அழைத்து செல்வதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். மயூ பெரிய பிள்ளையாகி விட்டார்.
இதற்காக அவளுக்கு நாளைய தினம் விழா செய்ய வேண்டும் என ராதிகா, கோபியிடம் கூறுகிறார்.
இதனை கேட்ட கோபி, பதறியபடி, “அய்யய்யோ நாளைக்கு இனியாவுடைய கேரளா ட்ரிப் இருக்கு” என கூறுகிறார்.
உடனே, டென்க்ஷனான ராதிகா “நீங்க இல்லாம நாங்க ஃபங்ஷன் பண்ணனுமா?” என மிரட்டும் வகையில் கேள்வி கேட்டுள்ளார்.
கதைப்படி மயூக்காக கோபி வீட்டில் இருந்து விடுவார். அத்துடன் இனியாவின் கேரளா டூரும் தடைப்படும் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |