கல்லூரி படிப்பிற்கு தயாராகும் இனியா.. கோபியின் வேண்டுகோளை ஏற்பாரா? பதிலுக்காக காத்திருக்கும் குடும்பத்தினர்!
“இனியா நா சொல்லும் படிப்பை தான் படிக்க வேண்டும்” என பாக்கியா வீட்டிற்கு சென்று கோபி, இனியாவை வற்புறுத்தியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
ஆரம்ப காலங்களில் சாதாரண சீரியல்கள் போல் ஓடி கொண்டிருந்த சீரியல் ராதிகாவின் வரவிற்கு பின்னர் மக்களால் அதிகமாக விரும்பப்பட்டது.
இதனை தொடர்ந்து கோபி பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்தை கோபி வீட்டில் இதுவரையில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் கோபி ராதிகாவுடன் தான் இருந்து வருகிறார்.
பாக்கியாவிற்கு வீட்டை விற்று விட்டு தற்போது தனிமையில் ராதிகாவுடன் இருந்து வருகிறார்.
வீட்டிற்கே சென்று இனியாவை மிரட்டும் கோபி
இந்த நிலையில் தன்னுடைய பள்ளிபடிப்பை சிறப்பாக முடித்த இனியா தற்போது கல்லூரி படிப்பிற்காக தயாராகிவுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், கோபி இனியாவிற்காக ஒரு கல்லூரி விண்ணப்படிவத்துடன் மீண்டும் பாக்கியாவின் விட்டிற்கு வருகிறார்.
இனியாவிடம் “நா கூறும் படிப்பை தான் நீ படிக்க வேண்டும் ” என்கிறார். இதனால் கடுப்பான பாக்கியா,“ இனியாவிற்கு எது பிடிக்குமோ அதனையே படிக்கட்டும்..” என கண்டிப்புடன் கூறுகிறார்.
அந்த வகையில் இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில், இனியாவை தன்வசப்படுத்த வேண்டும் என நினைத்த கோபிக்கு பலத்த எதிர்ப்பு ஒன்று விழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NO |