கல்லூரிக்கு செல்லும் பாக்கியா? அதிர்ச்சியில் வாயடைத்துப் போன கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா இனியாவில் கல்லூரியில் சேர்ந்துள்ளதை தெரிந்த கோபி அதிர்ச்சியில் வாயடைத்து போயுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னனியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார். இதில் ராதிகாவிற்கும் கோபியின் அம்மாவிற்கும் இடையே நடந்த சண்டையால், பாக்கியா விடாமுயற்சி செய்து வீட்டை தன்வசப்படுத்தினார்.
இனியா தற்போது 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரியில் பாக்கியா பணம் கட்டி சேர்த்துள்ள நிலையில், கோபி நம்பமுடியாமல் அதிர்ச்சியுடனே காணப்பட்டார்.
தற்போது பாக்கியா லோன் விஷயமாக வங்கிக்கு சென்ற போது, அங்கு கல்லூரி முடித்தால் மட்டுமே லோன் தரமுடியும் என்று கூறியதால், பாக்கியாவிற்கு கல்லூரி படிக்க ஆசை வந்துள்ளது.
இனியாவின் கல்லூரியிலேயே பாக்கியாவும் படிக்க சேர்ந்து பணம் கட்டியுள்ளதை கேள்விப்பட்ட கோபி கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.