எவ்வளவு மோசமான பொடுகும் ஒரே வாஷ்ல போகணுமா? அப்போ இந்த பொருள் இருக்க ஷாம்போ போடுங்க
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு அதிகமாக பொடுகு பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்காக சந்தையில் கிடைக்கும் இரசாயனம் கலந்த பொருட்களை அதிகமாகி வாங்கி போடுகிறார்கள்.
இப்படி செய்தாலும் சிலருக்கு தீவிரமடைகிறது. இந்த பிரச்சினை குளிர் காலத்தை விட வெயில் காலத்தில் தான் அதிகமாக பாதிக்கின்றது.
அந்த வகையில், தலையில் ஒரு வகை வறட்சி, பிசுபிசுப்புடன் கூடிய திட்டாக மண்டையில் ஒட்டியிருக்கும். இவ்வாறு இருக்கும் பொடுகை அவ்வளவு சீக்கிரமாக மண்டையில் இருந்து அகற்றி விட முடியாது.
இப்படியான பிரச்சினை இருப்பவர்கள் ஷாம்பு தேர்வு செய்யும்போது கீழ்வரும் சில உட்பொருள்களை கவனமாகப் பார்த்து வாங்குதல் அவசியம். அப்படி என்ன பொருட்கள் ஷாம்போவில் இருக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
ஷாம்போவில் இருக்க வேண்டிய பொருட்கள்
1. Coal tar
ஷாம்போ வாங்கும் போது anti - dandruff ஷாம்புவில் coal tar உட்பொருளாக இருக்கிறதா என்பதனை கவனிக்க வேண்டும். இதிலிருக்கும் coal tar - இல் ஆக்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் இருக்கின்றன. இது மண்டையில் இருக்கும் படிந்திருக்கும் பிசுபிசுப்பான பொடுகை வெளியேற்ற உதவியாக இருக்கின்றது. அத்துடன் தலையில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைத்து பொடுகை நீக்கி நிவாரணம் தரும்.
2. Pyrithione zinc
பொடுகு இருப்பவர்கள் மற்ற விடயங்களை விட Pyrithione zinc இருக்கின்றதா? என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பொருள் ஈஸ்ட் உற்பத்தி தலையில் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும். அத்துடன் முடியின் வேர்க்கால்களில் இருக்கும் எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தி, பொடுகை சரிசெய்யும்.
3. Salicylic acid (சாலிசிலிக் அமிலம்)
anti dandruff ஷாம்புவில் சாலிசிலிக் அமிலம் கண்டிப்பாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். Pyrithione zinc உண்டாக்கும் அதிகப்படியான ஈஸ்ட் உற்பத்தியை முடியின் வேர்க்கால்களில் படிந்திருக்கும். இது சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் தலையில் இருக்கும் பிசுபிசுப்பையும் சரிச் செய்கின்றது.
4. Selenium sulfide
சல்ஃபரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு பொருள் தான் செலீனியம் சல்ஃபைடு. இது பொடுகு பிரச்சினையுள்ளவர்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும். இந்த பதார்த்தம் தலையில் ஒட்டியிருக்கும் பொடுகை வேறூடன் கழட்டி எடுக்கும். இந்த செலீனியம் சல்ஃபைடில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் இருக்கின்றன மற்றும் பொடுகினால் ஏற்படும் அரிப்பை இல்லாமலாக்கும்.
5. Ketoconazole
கீட்டோகெனசோல் என்பது ஆன்டி ஃபங்கல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பூஞ்சை எதிர்ப்பு சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் ஈஸ்ட் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும். பொடுகின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி பொடுகு தலைக்குள் வராமல் தடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |