இலங்கையில் அதி தீவிரமாக பரவும் வைரஸ்! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்
இன்புளுன்சா (Influenza) எனப்படுவது ஃபுளூ அல்லது சளிக்காய்ச்சல் எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும்.
இந்நோய் இன்புளுன்சா வைரசால் உண்டாக்கப்படுகிறது. இந்த நாட்களில் இருமல் தடிமன் மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகிய நோய்கள் பரவலாக காணப்படுகின்றது.
கடுமையான மழை, குளிர்ந்த காலநிலை போன்ற பல்வேறு பருவ மாற்றங்கள் காரணமாக இவ்வாறு நோய் தொற்று பரவி வருகின்றது.
அனேகமானவர்கள் மழையில் நனைந்து குளிர் காரணமாகவும் ஏனைய காரணிகளினாலும் இவ்வாறு நோய்வாய்ப்படுகின்றனர்.
எனவே இந்த காலப்பகுதியில் நாம் எங்களது ஆரோக்கியம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த இன்புளுன்சா காய்யச்சல் இலங்கையில் மட்டுமன்றி பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பல நாடுகளில் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நோய் அறிகுறிகள்
- காய்ச்சல்
- இருமல், சளி
- தொண்டை வறட்சி
- உடல் சோர்வு
ஆகியவை இந்த ஃப்ளூ வகை காய்ச்சல்களின் பொதுவான அறிகுறிகள்.
எவ்வாறு பரவும்
நோய் தொற்றியவரின் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலமாகத்தான் இந்த நோய் பரவும்.
அதே சமயம் தொற்றுள்ளவருடன் மிக மிக நெருக்கமாக இருந்தால் மட்டுமே இந்த தொற்று எளிதில் பரவும்.
மற்றபடி, காற்றில் பரவும் தன்மை இதற்கு கிடையாது.
தொற்று பாதித்தவர் இருமிய, தும்மிய இடங்களில் கைவைத்துவிட்டு நேரடியாக நம் மூக்கு, முகம் ஆகியவற்றில் வைத்துக்கொண்டால் பரவும்.
VIOLETASTOIMENOVA//GETTY IMAGES
தவிர்க்கும் வழிமுறைகள்
- முறையாக முகக்கவசம் அணிவது.
- கைகளைக் கழுவுவது
- நீரைக் கொதிக்க வைத்து, ஆறவைத்து குடிப்பது.
- தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகியவற்றின் மூலம் இதனை தவிர்க்க முடியும்.
நோய் தொடர்பில் சில ஆலோசனை துளிகள்
எவருக்கேனும் காய்ச்சல் இருமல் அல்லது தடிமன் குணம் காணப்பட்டால் வீட்டிலேயே இருக்க வேண்டும் குணம் அடையும் வரை ஓய்வு எடுத்துக் கொள்ளவும், இவ்வாறு செய்வதனால் ஏனையவர்கள் மத்தியில் நோய் பரவுகையை கட்டுப்படுத்தப்படும்.
தடிமன் ஏற்பட்ட நபர்கள் கட்டாயமாக கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்த வேண்டும், டிஷ்யூக்களை அங்கங்கே போடுவது கூடாது அவற்றை முறையாக குப்பையில் போட வேண்டும்.
தும்மும் போது சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தும்ம வேண்டும் தனது முழங்கையை பயன்படுத்தி தும்மும் போது உமிழ்நீர் துகள்கள் விசிறி தெளிப்பது தவிர்க்கப்படும்.
அன்றாட நடவடிக்கைகளின் போது குளிர்ந்த நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும் அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நோய் நிலைமைகள் அதிகரிக்க இடம் உண்டு.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளவும்.
போஷாக்கான உணவை எடுத்துக் கொள்ளவும். உங்களுக்கு தடிமன் காணப்பட்டால் உணவு சுவை குறைவடைய கூடும் எனினும் உங்களுடைய நோய் நிலைமையை கருத்தில் கொண்டு நன்றாக உணவு பானங்களை உட்கொள்ள வேண்டும்.
அதன் மூலமாக நோயை கட்டுப்படுத்த முடியும் இதன் ஊடாக இழந்த உடல் பலத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் நீல பெற்றுக்கொள்ள முடியும்.
ஓரளவு சூடான உணவுகளை உட்கொள்வது பொருத்தமானதாகும். வீட்டிலே சமைத்த உணவுகளை நோயாளிக்கு வழங்கவும் கடுமையான மழை வெள்ளம் காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது எனவே அவ்வாறான பகுதிகளில் கடைகளில் பெற்றுக் கொள்ளும் உணவின் ஆரோக்கியம் குறித்து சந்தேகம் காணப்படுகிறது.
மரக்கறி வகைகள் கீரை வகைகள் என்பவற்றை நன்றாக கழுவி சமைத்து உட்கொள்ளவும். நன்றாக நீர் அருந்தவும் குளிர்ந்த நீருக்கு பதிலாக நன்றாக கொதித்து ஆரிய நீரை பருகுவது பொருத்தமாகும் அவ்வாறான நீரும் சற்று சூடான நிலையில் அருந்துவது ஆரோக்கியமானது.
இந்த காலப்பகுதியில் உடலில் பலவீனமடைந்த நோய் எதிர்ப்பு சக்தியை மீளப் பெற்றுக் கொள்வது அவசியமாகின்றது.
நோய் நிலைமையால் கவலை அடைவதனை விடவும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது முதன்மையானது.