துணி மாஸ்க் பயன்படுத்துவரா நீங்கள்? உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

corona mask cloth mask who warning
By Manchu Jan 16, 2022 11:51 AM GMT
Report

நாம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸுடன் போராடி வருகிறோம். இந்த வைரஸும் இதுவரை பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. அதில் தற்போது உருமாற்றமடைந்துள்ள வைரஸ் விகாரம் தான் ஓமிக்ரான். இது மிகவும் வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் இது அனைத்து வயதினரையும் எளிதில் தொற்றக்கூடியதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்க்குகளை அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

மாஸ்க்குகளைப் பற்றி கூற வேண்டுமானால், பெரும்பாலான மக்கள் துணி மாஸ்க்குகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த துணி மாஸ்க்குகள் கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாக்காது என்று பல சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் புதிய ஆராய்ச்சியின் படி, பல பிறழ்வுகளைக் கொண்ட மற்றும் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரானை, துணி மாஸ்க் அணிவதன் மூலம் தடுக்க முடியாது. ஏனெனில் துணி மாஸ்க் பாதுகாப்பைத் தவிர்க்கக்கூடிய சிறிய துகள்களைக் கொண்டிருக்கலாம்.

துணி மாஸ்க் ஏன் பாதுகாப்பற்றவை?

பெரும்பாலான மக்கள் துணி மாஸ்க்குகளையே அணிய விரும்புகிறார்கள். ஏனெனில் அவை வசதியானவை. இருப்பினும், சுகாதார நிபுணர்கள் சர்ஜிக்கல் மாஸ்க் வடிவத்தைக் கொண்ட துணி மாஸ்க்குகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

மேலும் ஒற்றை அடுக்கு கொண்ட துணி மாஸ்க்குகள் பெரிய நீர்த்துளிகளைத் தடுக்கலாமே தவிர, சிறிய நீர்த்துளிகள் அவற்றால் தடுக்கப்படுவதில்லை. அதுவும் கொரோனா மாறுபாடு மிகவும் வேகமாக பரவக்கூடியதாக இருந்தால், துணி மாஸ்க் அல்லது சர்ஜிக்கல் மாஸ்க் இரண்டுமே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.

உங்களுக்கு ஓமிக்ரைனில் இருந்து சரியான பாதுகாப்பு வேண்டுமானால், துணி மாஸ்க்கை அணிய வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் தொற்றை உண்டாக்கும் சிறிய நீர்த்துளிகள், துணியின் பெரிய துளைகள் வழியாக நுழைந்து தொற்றை உண்டாக்கலாம்.

துணி மாஸ்க்

துணி மாஸ்க்கின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அதை ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியும் மாஸ்க்குகளைப் போலின்றி, துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இந்த மாஸ்க் மற்றவர்களுடன் பேசும் போது மற்றும் மூடிய இடத்தில் ஒருவருடன் நேரத்தை செலவிடும் போது, அவர்களின் நீர்த்துளிகள் மேலே படாமல் இருக்க துணி மாஸ்க்கைப் பயன்படுத்த வேண்டும்.

சர்ஜிக்கல் மாஸ்க்

சர்ஜிக்கல்/அறுவை சிகிச்சை மாஸ்க்குகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இவை ஒரு தளர்வான மற்றும் பொருத்தமான பாதுகாப்பு சாதனமாகும். இந்த மாஸ்க்கானது அணிபவரின் உதடுகள் மற்றும் மூக்குக்கு இடையே ஒரு தடையை உருவாக்குகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் சூழலில் இருந்து உடனடி பாதுகாப்பளிக்கிறது.

WHO வழிகாட்டுதல்களின் படி மாஸ்க் எவ்வாறு அணிய வேண்டும்?

உங்கள் மாஸ்க்கை அணியும் முன்பும், அகற்றுவதற்கும் முன்பும் பின்பும் மற்றும் ஒவ்வொரு முறை மாஸ்க்கை தொடர்பு கொள்ளும் போதும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.  

நீங்கள் அணியும் மாஸ்க் மூக்கு, வாய் மற்றும் தாடை ஆணிய பகுதிகளை நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.

மாஸ்க்கை அகற்றும் போது, அதை ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பையில் வைக்க வேண்டும். அதுவே துணி மாஸ்க் என்றால் தினமும் அதை துவைக்க வேண்டும். ஒருவேளை சர்ஜிக்கல் மாஸ்க்காக இருந்தால், அதை தூக்கி எறிய வேண்டும்.

வால்வுகளைக் கொண்ட மாஸ்க்குகளைப் பயன்படுத்தக்கூடாது.

நினைவில் கொள்ள வேண்டியவை:

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பது, மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது மற்றும் இருமலின் போது முழங்கை அல்லது டிஸ்வைப் பயன்படுத்துவது போன்ற எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். முடிந்தவரை, வெளியே அதிகம் சுற்றாமல் வீட்டிலே இருக்க முயலுங்கள்.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US