அப்பா அம்மாவுக்கு பிடித்த பாடல்... இந்திரஜா சங்கருக்குள் இப்படியொரு திறமையா!
மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்க்கு மிகவும் பிடித்த பாடலை வீணையில் வாசித்து, அவரது மகள் இந்திரஜா தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திரஜா சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு இந்த திரைப்படத்தின் பின்னர் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.
அதனை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்தும் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.இந்த தம்பதியினருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
அண்மையில் யாரும் எதிர்பாராத வகையில், இந்திரஜாவின் தந்தையான ரோபோ சங்கர் காலமானார். வெறும் 46 வயதில் இவரின் இறப்பு யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருந்தது.

இந்நிலையில்,இந்திரஜா தனது தந்தை மற்றும் தாய் இணைந்திருந்த அழகிய புகைப்படங்களை பதிவிட்டு, இவர்களின் விரும்பமான பாடலை வீணையில் இசைத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |