நீ இல்லாம மூன்று நாள் கடந்துருச்சிப்பா... இந்திரஜாவின் கண்ணீர் மல்க வைக்கும் பதிவு!
நீ அல்லாமல் மூன்று நாள் கடந்துருச்சிப்பா... நீ தான் எங்கள அதிகமா சிரிக்க வைச்சிருக்க, இப்போ அதிகமா அழ வைக்கிறதும் நீயே தான்.. மறைந்த நடிகர் ரோபோ சங்கர் குறித்து அவரது மகள் இந்திரஜா வெளியிட்டுள்ள கண்களை கலங்க வைக்கும் உணர்ச்சிபூரை்வமான பதிவு தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
இந்திரஜா சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர். இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு இந்த திரைப்படத்தின் பின்னர் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. அதனை தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்தும் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.இவர்களுக்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இந்திரஜாவின் தந்தையான ரோபோ சங்கர் காலமானார். வெறும் 46 வயதில் இவரின் இறப்பு யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகவுள்ளது.
இந்நிலையில், நீ இல்லாம மூன்று நாள் கடந்துருச்சிப்பா... நீ தான் எங்கள அதிகமா சிரிக்க வைச்சிருக்க, இப்போ அதிகமா அழ வைக்கிறதும் நீயே தான்..
இந்த 3 நாளா எனக்கு உலகமே தெரியல, நீ இல்லாம நம்ம குடும்பத்த எப்படி கொண்டு நடத்த பேரோம்னு தெரியல, ஆனால் நீ எனக்கு சொல்லிக்கொடுத்த மாதிரி கண்டிப்பா உறுதியா இருப்பேன், விமர்சனங்களுக்கு பயப்படமாட்டேன், தம்பி உன்ன ரொம்ப தேடுரான் பா..
நீ நிச்சயம் உன் நண்பர்கள் மற்றும் அண்ணன்களோட மேல சந்தோஷமா தான் இருப்ப... கண்டிப்பா உன் பேர காப்பாத்துவன் உன்ன பெருமைபட வைப்பேன் என குறிப்பிட்டு இந்திரா தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றுடன் தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |