டெங்கு கொசுவை ஒழித்துக் கட்டும் புதிய தொழிற்சாலை.. இங்கு என்ன உள்ளது தெரியுமா?
டெங்கு கொசுவை ஒழிப்பதற்காக வேறொரு கொசு வளர்க்கும் திட்டம் பிரேசில் நடைமுறைக்கு வரவுள்ளது.
டெங்கு நோய் பாதிப்பு
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா உட்பட பல நாடுகளில் டெங்கு நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.
இதனை தடுக்கும் திட்டங்கள் பல இருந்தாலும் அவை டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளாகவே உள்ளது அல்லது மனிதர்களுக்குள் நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறையாகவே உள்ளது. ஆனாலும் டெங்கு நோயின் பாதிப்பு குறையவில்லை.
இதனை கவனத்திற்கு எடுத்த பிரேசில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது டெங்கு நோயின் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்று. இந்த நாட்டில் சுமாராக 21.2 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பல கோடிக்கணக்கான மக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள்.
இந்த நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த பிரேசில் புதிய நடவடிக்கையொன்றை மேற்க் கொண்டு வருகிறது. அதாவது, டெங்கு நோயை மக்களுக்கு பரப்பாத கொசுக்களை ஒரு தொழிற்சாலை உற்பத்திச் செய்து வளர்க்கிறார்கள்.
பிரேசிலில் உள்ள குரிடிபா (Curitiba) நகரில் Wolbito do Brasil தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கில் முட்டைகள் உற்பத்தி
பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்ற அறக்கட்டளைகளுடன் இணைந்து இந்த கூட்டு முயற்சியை ஆரம்பித்துள்ளது. இங்கு வாரத்துக்கு 100 மில்லியன் (10 கோடி) கொசு முட்டைகள் உற்பத்திச் செய்யப்படுகின்றன. இந்த கொசுக்களுக்களின் முட்டைகளுக்கு பிறக்கும் பொழுதே Wolbachia எனப்படும் புதிய பாக்டீரியா செலுத்தப்படுகிறது.
இந்த பாக்டீரியா உள்ளே சென்று கொசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து டெங்கு நோயை பரப்பும் வோல்பாச்சியா பாக்டீரியா கொசுக்களுக்கு டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா உள்ளிட்ட பாதிப்புகளை பரப்ப முடியாமல் செய்யும். சில சமயங்களில் நோய் பரப்பப்பட்டால் மனிதர்களால் அதனை குணப்படுத்த முடியும்.
இனபெருக்கம் நடைபெறும்..
நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலை ஒவ்வொரு ஆண்டும் பிரேசிலில் சுமார் 1.40 கோடி மக்களை டெங்கு நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.
இந்த நிறுவனத்தில் உற்பத்திச் செய்யப்படும் கொசுக்கள் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியில் விடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களுக்கு விடப்பட்டு பிற கொசுக்களுடன் இனப்பெருக்கம் செயன்முறை நடக்கும்.
இதன் விளைவாக டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தாத கொசுக்கள் உருவாக்கம் பெறும். இதுவே குறித்த நிறுவனத்தின் தொலைநோக்கமாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |