இந்திய பெண்ணின் மற்றுமொரு சாதனை! உலகையை திரும்பி பார்க்க வைத்த தைரீயம்..
கடல் பைலட்டாக தமிழக பெண்ணொருவர் சாதனை படைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய பெண்ணின் சாதனை
இந்தியாவில், சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா நிலோபர் எனும் பெண்ணொருவர் கடல் பைலட்டாக பதவி ஏற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பொதுவாக கடலில் இருக்கும் கப்பல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனி தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும் என்பார்கள்.
இந்த சாதனையில் குறித்த பெண் சுமார் 223 கிமீ தூரத்தை கடக்க உள்ளார், அதில் 148கிமீ ஹூக்லி வழி செல்லும் அதிக வளைவுகள் மற்றும் தடைகள் கொண்ட அபாயமான வழியாகும். செல்வதற்காகவே கடுமையான பயிற்சி பெறவிருக்கிறாராம்.
இதனை தொடர்ந்து இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் கடல் தொழில்நுட்ப பொறியியல் படித்து விட்டு துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
இதேவேளை, அதில் இருந்து கடற்படை மாணவியாக ஒரு வருடம் பயிற்சிபெற்று முதல் மற்றும் இரண்டாம் நிலை சாதனையையும் நிலைநாட்டியுள்ளார்.
வைரலாகும் புகைப்படங்கள்
இந்த நிலையில் இவரின் விருது வாங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இவரின் பணி மேம்மேலும் தொடர வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.