ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல போறீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்
ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
ஊட்டி , கொடைக்கானல் சுற்றுலா
கோடை காலத்தில் அனைத்து மக்களும் ஒரு குளிர்ச்சியான இடத்திற்கு செல்ல ஆசைப்படுவார்கள். அப்படியான இடம் தான் இந்த ஊட்டி , கொடைக்கானல்.
அதுவும் இப்போது எல்லோருக்கும் கோவை விடுமுறையாகும். இதை முன்னிட்டு சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு பொதுமக்கள் அதிகமாக வருகை தருகிறார்கள்.
அந்த வகையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறிப்பாக, ஊட்டிக்கு இ-பாஸ் நடைமுறையில் வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி கொடைக்கானலில் வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மலர் கண்காட்சிகள் நடைபெறவுள்ளதால் இந்தக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோடை விழாவின் போது தேவை உருவாகும்பட்சத்தில் ஊட்டிக்கு செல்ல கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே நடைமுறையுடன் கொடைக்கானலுக்கு செல்ல கூடுதலாக 300 வாகனங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி கொடுக்கபட்டுள்ளது. எனவே இந்த கோடை விடுமுறையை ஊட்டி , கொடைக்கானல் சென்று சிறப்பாக களிக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |