இந்தியா தென்னாப்பிரிக்க தொடர்; அணியில் இடம் பிடிக்க 3 பேர் கடும் போட்டி! யாருக்கு வாய்ப்பு?
ஐபிஎல் தொடர் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளை விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் ஜுன் 9ம் தேதி தொடங்கி ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. கே. எல். ராகுல் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியை தேர்வு செய்ய தற்போது குழப்பத்தில் உள்ளார்.

குழப்பத்தில் கேப்டன்
அதாவது கேப்டன் கே.எல்.ராகுலுடன் ஓப்பனிங் களமிறங்கப்போவது யார் என்பது தான் மிகப்பெரிய பிரச்சினையே. அதில், இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேஷ் ஐயர் என 3 பேர் உள்ளனர்.
இந்த 3 பேரில் ருதுராஜ், வெங்கடேஷ் ஐயர் இந்த ஐபிஎல் தொடரில் ரொம்பவே சொதப்பியவர்கள். இஷான் கிஷன் மட்டும் நல்ல ஃபார்மில் உள்ளவர். இந்திய அணியை பொறுத்தவரை நீண்ட நாட்களாகவே இஷான் கிஷான் மற்றும் ருதுராஜ் கெயிக்வாட் இடையே போட்டி நிலவி வருகிறது.

கடும் போட்டி
ஆனால் தற்போது வரை இஷான் கிஷன் தான் அணியில் அதிகம் தேர்வாகியவர். ருதுராஜுக்கு 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதுவும் தொடர்ச்சியாக இல்லை.
எனவே இந்த தொடரிலாவது ருதுராஜுக்கு தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்களை தாண்டி ஜொலிக்காத வெங்கடேஷ் ஐயர் அணியில் இடம்பிடிப்பாரா என தெரியவில்லை.

பாண்டியா ரிட்டன்
இவர் பந்தும் வீசுவார் என்பது முக்கியமாக இருந்தாலும் ஃபார்மில் இல்லாத காரணத்தினால் புறக்கணிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களை எல்லாம் தாண்டி தன் திறமையை மீண்டும் நிரூபித்த ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியுள்ளதால், இனி வெங்கடேஷ் ஐயரை ஓப்பனிங்கில் களமிறக்கி பார்ப்பார்களா என்பது சந்தேகம் தான்.
மேலும், இரண்டு ஆல் ரவுண்டர்கள் இந்திய அணியில் இருந்தால் டி20 போட்டிகளில் பலமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்கள் 3 பேரில் தேர்வு செய்ய கேப்டன் ராகுல் குழப்பத்தில் இருந்தாலும், அணியின் ப்ளேயிங் 11 எடுக்கவும் சிரமப்படுவார் என தெரிகிறது.