இந்திய அணி அடுத்த 4 நாடுகளுடன் மோதும் சுற்றுப்பயணம் அட்டவணை வெளியீடு - ரோகித்தின் படை வெல்லுமா?
இந்தியாவில் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இந்திய அணி அடுத்த சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜூன் 9 ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடரில் முக்கியமான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா தொடரை தொடர்ந்து அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கும் இடையே மோதுகிறது.
அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 1 ம் தேதி முதல் 5ம் தேதி வரை இங்கிலாந்தில் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது.
மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒரு நாள் போட்டியும், 5 டி20 போட்டியையும் விளையாட உள்ளது,. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் ஜூலை 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
இதன் பின், டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ளதால் அந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி போதுமான அளவு போட்டிகளில் விளையாடவே இப்படி அடுத்தடுத்த தொடர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.