ஒரே நேரத்தில் இரு குழுவாக இரண்டு போட்டியை விளையாடும் இந்திய அணி - குஷியில் ரசிகர்கள்
இந்தியாவில் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், இந்திய அணி அடுத்த சுற்றுப்பயணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜூன் 9 ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
அதன்பின்னர் 3 நாடுகளுடன் அடுத்தடுத்து இந்திய அணி விளையாட உள்ளது. அதில் அயர்லாந்து, இங்கிலாந்து, கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் பின் டி20 உலக கோப்பைக்கு தயராகி விடும்.

இந்நிலையில், வரும் ஜூன், ஜூலை மாதத்தில் இந்திய அணி இரு குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுடன் மூன்று முறை மோதவுள்ளது.
அதாவது, ஜூன் மாதம் அயர்லாந்தில் இந்திய அணி டி20 போட்டிகள் விளையாடும்போது, டெஸ்ட் அணியில் இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டம் விளையாட உள்ளது.

மேலும், ஜூலை முதல் வாரத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ரோகித் அணி டெஸ்ட்டில் களமிறங்கும் நேரத்தில், மற்றொரு அணி இங்கிலாந்தில் இரண்டு டி20 பயிற்சி ஆட்டங்களை விளையாடும்.
ஆனால், பயிற்சி போட்டிகளை சேனல்கள் கவர் செய்யும் பட்சத்தில் ரசிகர்களுக்கு இரு போட்டியையும் காண செம்ம விருந்தாக இருக்கும்... ஏற்கனவே ஐபிஎல்லில் இதுபோன்று ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது....