கர்ப்பமாக இருக்கும் இலியானா காதலனோடு வெளியிட்ட புகைப்படம்!
நடிகை இலியானா தற்போது திருமணம் செய்யாமல் கர்ப்பமாக இருக்கின்ற வேலையில் காதலனோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இலியானா
தமிழ்,தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை இலியானா.
இவர் 2006ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதற்குப் பிறகு அவர் வேறு எந்த தமிழ்த்திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காதலனோடு இலியானா
இந்நிலையில் நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக திடீரென அறிவித்திருந்தார். ஆனால் அவர் திருமணம் முடிக்காமல் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பலரும் குழந்தைக்கு தந்தை யார் எனக் கேட்டுக் கொண்டே தான் இருந்தார்கள்.
ஆனால் அவர் அதுபற்றி இன்னும் எதுவும் வாய்திறந்து கூறவில்லை. இந்நிலையில் அவர் தனது காதலனோடு சேர்ந்து இருக்கும் மோதிர விரல் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் யாரென சொல்லாமல் மக்களை இன்னும் குழப்பி வருகிறார்.