4 வயதில் குழந்தையை வைத்துக் கொண்டு இது தேவைதானா? சமந்தாவுக்கு போட்டியாக வந்த சாயிஷா!
சிம்புவின் பத்து தல படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் செம்ம குத்தாட்டம் போட்டியிருக்கிறார் ஆர்யாவின் மனைவி சாயிஷா.
நடிகை சாயிஷா
வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சாயிஷா. பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்து விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காதலித்தனர். பிறகு 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
தற்போது குடும்பம் என செட்டிலாகிய சாயிஷா சிம்பு படத்தில் ரீஎன்ரி கொடுத்திருக்கிறார்.
பத்து தல படத்தில் குத்தாட்டம் போட்ட சாயிஷா
திருமணம் குழந்தை என செட்டிலாகிய பின்னர் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்த இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, சிம்புவின் பத்து தல படத்தில் வேற மாதிரி நடனமாடியிருக்கிறார்.
பத்து தல திரைப்படத்தில சிம்பு நாயகனாக நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் ரஹ்மான் இசையில் உருவான ராவடி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.
இந்த பாடலில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார் போட்டிருக்கிறார். இதனை பலரும் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்களைக் கொடுத்து வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை விட்டிருக்கிறார்.
அதில் “எனக்கு பிடித்தமான விஷயத்தை செய்வதில் எப்போதும் நான் தயக்கம் காட்டியதில்லை. டான்ஸ் என்பது சிறுவயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். அதை செய்ததில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என பதிவிட்டிருக்கிறார்.