மனைவியுடன் அடிக்கடி சண்டையா? கணவர்களே இதனால் 3 நன்மை இருக்கு
திருமண உறவில் இருக்கும் உங்கள் தாத்தா - பாட்டியில் தொடங்கி தாய் - தந்தை, பெரியம்மா - பெரியப்பா, சித்தி - சித்தப்பா, மாமா - அத்தை என குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி உங்களின் நண்பர்கள் வரை பலரும் அடிக்கடி சண்டையிடுவதை பார்த்திருப்பீர்கள்.
அது காதலித்து திருமணம் செய்தவர்களாக இருக்கலாம், பல நாள்கள் லிவ்-இன் உறவில் இருந்து அதன்பின் திருமணம் செய்தவர்களாக இருக்கலாம், நீண்ட நாள் நண்பர்களாக இருந்து திருமணம் செய்தவர்களாக இருக்கலாம், வீட்டில் பார்த்து திருமணம் செய்தவர்களாக இருக்கலாம், திருமணமாகிவிட்டாலே ஆண் - பெண் இடையே சண்டை சச்சரவு வருவது இயல்பான ஒரு விஷயம்.
ஆனால் இதைக்கண்டு நீங்கள் திருமண உறவுக்கு செல்லலாமா, யாரை திருமணம் செய்துகொள்வது என சஜலர் அச்சமடைகின்றனர். பொதுவாக சண்யிட்டு வாழும் தீருமண வாழ்க்கை தான் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கையாகும்.
நேர்மை அதிகரிக்கும்
திருமண வாழ்க்கையில் இருக்கும் போது சண்டை வந்தால் அதை கண்டு அஞ்ச வேண்டாம். இது உங்கள் வாழ்க்கையில் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதை உணர்த்தும். ஒவ்வொருவருக்குள்ளும். நேர்மை என்பதை வளர்த்துக்கொள்வீர்கள். இதன் காரணமாக உறவு நீடிக்கும். இதை சண்டையிட்டுகொள்ளாமல் உரிய முறையில் கேட்டு தெரிந்து கொள்வது நன்மை தரும்.
நெருக்கம் அதிகமாகும்
அடிக்கடி சய்டையிடும் போது உறவானது இன்னும் இருந்ததை விட நெருக்கம் அதிகமாகும். உறவில் நீங்கள் நெருக்கமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இது ஆரோக்கியமான ஒரு உறவை மேம்படுத்தும் என கருத்து வெளியாகி இருக்கின்றது.
பலவீனம் பறந்துபோகும்
அடிக்கடி சண்டையிடுவதன் மூலம் நீங்கள் பலவீனமாக உணரும் விஷயங்களை நீங்கள் நிச்சயம் மறப்பீர்கள். அதாவது உறவில் வரும் பிரச்னைகளையே தீர்க்கும் போது உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இதனால் பலவீனங்கள் உங்களுக்குள் இருக்காது. திருமண உறவில் அடிக்கடி சண்டை வந்தாலும் இந்த மூன்று விஷயங்கள் உங்களின் திருமண உறவை பலமாக்க தாங்கிப்பிடிக்கும். எனவே, அடுத்த முறை சண்டையிடும் போது அதனால் வரும் நன்மைகளை புரிந்துகொண்டாலே மற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |